
இளைஞர்கள் சிலரை தாக்கிய வழக்கில் திமுக இளைஞரணி அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்
கோவை மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர் கோட்டை அப்பாஸ் 45 வயதான இவர் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருகிறார்
உறவினர் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சில நாட்களுக்கு முன் மாயமானார். அந்தப் பெண்ணை காதலனுக்கு திருமணம் செய்து வைக்க சிலர் கடத்திச் சென்றதாக கூறி அவர்களை கோட்டை அப்பாஸ் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது
விசாரணைக்காக போலீசார் நேற்று அழைத்துச் சென்றனர் அவர் மீது கொலை மிரட்டல் தாக்குதல் உள்ளிட்ட மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்
அப்பாஸ் கைதான தகவல் அறிந்து திமுகவினர் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர் ஆனால் அதற்கு முன்பே அவர் ஜாமீன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அவர்கள் கலைந்து சென்றனர்