பத்திரிகைகளை புரட்டிப் போட்ட கொரோனா..!

news papers - 2026

நீங்கள் பத்திரிக்கைகளை வாங்கி புரட்டிப் பார்த்து செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், பத்திரிக்கைகள் படும் பாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள். கொரோனாவின் தாக்கத்திற்கு பத்திரி்க்கை உலகம் சுருண்டு படுத்துவிட்டது. உள்ளூர் பிரச்சினைகள் தொடங்கி உலகப் பிரச்சினைகளை வரை அத்தனை பேரையும் வம்பளத்துக் கொண்டிருந்த பத்திரிக்கைகள், மீடியாக்கள் எல்லாம் வாய்மூடி மெளனியாகிக் கிடக்கின்றன.

பத்திரிக்கைகளுக்கு வருமானமே அதற்கு கிடைக்கும் விளம்பர வருவாய் மட்டுமே. தற்போது வணிக நிறுவனங்கள், மத்திய- மாநில அரசுகள், அரசியல்வாதிகள் தரும் விளம்பரங்கள் அடியோடு  நிறுத்தப்பட்டு விட்டதால் பத்திரிக்கைகள் எல்லாம் வைட்டமின்களை இழந்து சவலைப் பிள்ளைகளாகிவிட்டன.

இந்தியாவில் பத்திரிக்கைகள், மீடியாக்களை  நம்பி சுமார் 30 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பத்திரிக்கையாளர்கள், மீடியாக்காரர்கள் எல்லாம் அரசிடம் சென்று கோரிக்கைகள் வைப்பதற்கு பதிலாக பத்திரிக்கை முதலாளிகள் எல்லாம் முந்திக் கொண்டு அரசிடம் சென்று மனுக்களை அளிக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களவையில் இப் பிரச்சினைகளைப் பேசச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் தற்சார்பு இந்தியா எனும் பேரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 20 லட்சம் கோடி சீரமைப்புத் திட்டத்தில் பத்திரிக்கை களுக்கு தனித் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. பத்திரிக்கைகளை அச்சடிக்கும் காகிதத்தின் விலை உயர்வு,  ஊழியர்களுக்கான சம்பளம், பிரிண்டிங் காஸ்ட், நிர்வாகச்  செலவுகள் பத்திரிக்கைகளின் கழுத்தை நெரிப்பதால் இனி பல பத்திரிக்கைகள் உயிரிழக்க வேண்டி நிலைக்கு வந்துவி்ட்டன.

குறிப்பாக வர்னாகுலர் எனப்படும் பிராந்திய மொழிப் பத்திரிக்கைகளுக்கு சிறிய அளவே நட்டம் என்றாலும் ஆங்கிலப் பத்திரிக்கைகள், பெரிய பெரிய மீடியாக்கள் நிலைமை எல்லாம் தலைகீழாகிவிட்டன. பத்திரிக்கை உலகின் டாப்பரான டைம்ஸ் குரூப்பிற்கு டைம் சரியில்லை. இங்கு 1000 கோடி நட்டக்கணக்கு சொல்கிறார்கள். எமெர்சென்சியை எதிர்த்துப் போராடிய இந்தியன் பத்திரிக்கை ஒன்று மூச்சுவிடவே திணறிக் கொண்டிருக்கிறது. ஓரளவு ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கிக் கொண்டிருந்த இந்து குரூப்பையும் கடவுள் கைவிட்டுவிட்டார்.

ALSO READ:  விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இந்தியாவில் சிறு சிறு பத்திரிக்கைகள் எல்லாம் மூடப்பட்டு, மின்னஞ்சல் மூலமும், இணைய தளம் மூலம் பத்திரிக்கைகளை நடத்த முயற்சி செய்து கொண்டிருக் கின்றன. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறிய வணிக முதலாளிகள், ஈவண்ட்ஸ்கள் மூலம் லாபம் பார்த்துக் கொண்டிருந்த டிவி மீடியாக்கள் எல்லாம் பழைய படங்களையும், சொதப்பில்லாத செய்திகளையும் வாசித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை,  தினமும் அரண் சொல்லும் சூரிய நாளேடு, தனது ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பளத்தைக் குறைத்துவிட்டது. 58 வயதிற்கு மேற்பட்ட 40 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. தினமும் மலரும் நாளேடு, சேலம், ஈரோடு பதிப்புகளை மூடிவிட்டு, ஊழியர்களுக்கு நிரந்தர விடுப்பு கொடுத்துவிட்டது.

தமிழகத்தில் தினமும் 1 கோடி வாசகர்கள் படிக்கும் நாளேடு என்று சொல்லிக் கொள்ளும் பத்திரிக்கையும் ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளத்தை கொடுத்து விட்டு, அவர்களின் வாய்களை மூடி வைத்துள்ளது. தரமான நாளேடு என்று சொல்லிக் கொள்ளும் மணி பேப்பர், தனது ஊழியர்களுக்கு 10 சதம் முதல் 30 சதம் வரை சம்பளக் குறைப்பை அறிவித்துவிட்டு, ஊழியர்களுக்கும் அந்தச் சம்பளத்தையும் இன்னும் வழங்காமல் உள்ளது. எதிர்காலத்திலாவது சம்பளம் வழங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மீதமுள்ள ஊழியர்களும் இங்கு பணிக்கு வருகிறார்கள். சற்று ஏறக்குறைய எல்லா பத்திரிக்கைகளிலும் 20 சதவீத ஆட்குறைப்பு, 10 முதல் 30 சதவீதம் வரை சம்பளக் குறைப்பு அரங்கேறிவிட்டது. அனுபவசாலிகள் என்று சொல்லப்படும் மூத்த ஊழியர்கள் எல்லாம் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

வார, மாத பத்திரிக்கைகள் பற்றி சொல்லித் தெரியவே வேண்டாம். ரயில், விமான போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டதால் தனது சஞ்சிகைகளை வெளியூருக்கு அனுப்ப முடியாமல், பத்திரிக்கைகளை அச்சடிப்பதையை அந் நிறுவனங்கள் நிறுத்தி்விட்டன. வார-மாத பத்திரிக்கைகளும் பாதிக்கு பாதி ஆட்குறைப்பு, சம்பள நிலுவை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கொரோனாவின் பின் தாக்க நடவடிக்கைகள் பத்திரிக்கைத் தொழிலையும் பெரும் சுனாமிக்கு ஆட்படுத்தி வைத்துள்ளது. எல்லோரையும் போல் எதிர்காலத்திற்காக பத்திரிக்கைகளும் காத்திருக்கின்றன.

  • சதானந்தன், சென்னை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories