பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்- அமைப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்: இந்து தமிழர் கட்சி!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
front of police logo
front of police logo

“பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்” அமைப்புக்கு தமிழகம் முழுக்க “நிரந்தர” தடை விதிக்க வேண்டும் என்றும், காவல்துறை ஆள் பற்றாக்குறை எனில் காவலர்கள் தேர்வு செய்து காவலர்களை அதிகப்படுத்த வேண்டும் என்றும் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…

Dr.பிரதீப் V.பிலிப், (நிறுவனர் & இயக்குநர்), prof G.லூர்துசாமி மாநில நிர்வாக அதிகாரி, மாநில துணை நிர்வாக அதிகாரி Dr ஜான் A.ஜோசப் போன்ற கிறிஸ்தவ அதிகாரிகளால் தொடங்கப்பட்ட “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்” தமிழகம் முழுக்க காவல்துறைக்கு உதவியாக செயல்பட்டு வந்தார்கள்.

சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் மரணமடைந்ததற்குப் பிறகு “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்” என்பது சேவாபாரதியின் உட்பிரிவு என்பது போன்றும், ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்தும் அவதூறு பரப்பக் கூடிய வேலையை திருமாவளவன், சுந்தரவல்லி, திருமுருகன் காந்தி மற்றும் சுப வீரபாண்டியன் கருப்பர் கூட்டம் வலைஒளி சேனல் மற்றும் பலர் செய்து வந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் கிறிஸ்தவ அதிகாரிகள் நிர்வாக மேலாதிக்கத்தின் கீழ் வரும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தற்காலிகமாக தடை செய்யபடுவதாக, திருச்சி டிஐஜி ஆனி விஜயா அவர்களும், விழுப்புரம் எஸ்பி திரு ராதாகிருஷ்ணன் அவர்களும், திண்டுக்கல் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் இப்படி தமிழகத்தில் பல மாவட்டங்களில் தற்காலிகமாக செயல்பட தடை விதிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இந்த “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு” தமிழகம் முழுக்க செயல்படுவதற்கு “நிரந்தரமாக தடை “செய்து தமிழக காவல்துறை நிர்வாகம் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அதற்கு மாற்றாக காவல் துறையில் ஆள் பற்றாக்குறை இருந்தால் அந்த பற்றாக்குறையைப் போக்குவதற்கு தேவையான காவலர்களை முறையான தேர்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு காவல்துறை முறையான அரசு தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் வேண்டுகோள் முன்வைக்கின்றோம்.

பிரண்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தற்காலிக தடை விதித்த
சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு நன்றி. இதற்கு நிரந்தர தடை விதிக்க அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகள் தமிழக காவல்துறை இயக்குனருக்கு பரிந்துரை கடிதம் எழுத வேண்டும் என இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்… என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.