December 7, 2025, 1:52 AM
25.6 C
Chennai

ஒரு நீதிபதியே இப்படி இருந்திருந்தால்..?! மற்ற துறைகளில் எத்தனை முறைகேடுகளோ?!

banumathi
banumathi

நீதிபதி பானுமதியின் போலித்தன்மை!

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த பானுமதி அவர்களுக்கு கடந்த ஜூலை 19ஆம் தேதி வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய பானுமதி, ‘நான் ஒரு இந்துவாக இருந்தாலும் இயேசுவின் போதனைகளை நம்புகிறேன். நான் படித்து முன்னுக்கு வந்தேன். எனக்கு முன்னால் மலைபோன்ற தடைக் கற்கள் இருந்தன. ஆனால் இயேசு எனக்கு வழங்கியதை எந்த சக்தியாலும் தடுக்க முடியவில்லை’ என்று பேசினார்.

பானுமதி அவர்கள் பேசிய இந்த வார்த்தைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. அது அவர் மீதான நம்பகத் தன்மையையும் கேள்விக்குறி ஆக்குகின்றன.

முதலில் ஒருவர் இந்துவாக இருந்து கொண்டே இயேசுவையும் கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளையும் பின்பற்ற முடியுமா?இந்தக் கேள்விக்கு கிறிஸ்துவ மத அறிஞர்கள் தொடங்கி சாதாரண கிறிஸ்தவர்கள் கூட இல்லை என்றே பதில் சொல்வார்கள்.

கிறிஸ்துவ மதத்தின் அடிப்படை சட்ட திட்டங்களாக பத்து கட்டளைகள் உள்ளன. அவை கிறிஸ்துவர்கள் யாரை வணங்கலாம் என்பதில் சமரசம் இல்லாத ஒரு முடிவை கூறுகின்றன. குறிப்பாக முதல் கட்டளையில் கிறிஸ்தவர்கள் நம்பும் ஏகோவா பின்வரும் வரிகளை கூறுகிறார்.

‘உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
‘(எக்சோடஸ் 20:1-3)

யகோவாவின் குணத்தை மேலும் தெரிந்துகொள்ள இரண்டாவது கட்டளையை பார்ப்போம். இரண்டாவது கட்டளையில் ஏகோவா ‘மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; 5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன. 6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.(யாத்திராகமம் 20:4-6)

இப்போது இதை மனதில் வைத்துக்கொண்டு இந்த கேள்வியை கேட்போம். நீதிபதி பானுமதி ஒரு இந்துவா அல்லது கிறிஸ்தவரா? ஏற்கனவே சொன்னது போல் நீங்கள் இயேசுவை விசுவாசித்து ஆக இருந்தால் நீங்கள் அவரைத் தவிர வேறு யாரையும் வணங்க முடியாது.

கிறிஸ்துவ மதத்தின் கோட்பாடு படி, ஏகோவா, ஏசு, பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்று தான்.நாம் ஏற்கனவே பார்த்ததுபோல ஏகோவா தன்னை வணங்குபவர்கள் வேறு யாரையும் வணங்குவது அனுமதிப்பது கிடையாது. இதுபற்றி கத்தோலிக்கர்கள் மற்றும் புரோட்டஸ்டன்ட் திருச்சபைகள் ஏற்றுக்கொள்ளும் நிசென் கிரீட் (https://www.crcna.org/welcome/beliefs/creeds/nicene-creed) என்பதில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இப்போது இன்னொரு கேள்வி எழுகிறது. பானுமதி கிறிஸ்தவராக இருக்கும் பட்சத்தில் தாழ்த்தப்பட்ட இந்து மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை அவர் முறைகேடாக பயன்படுத்தி இருக்கிறாரா? என்பதுதான் அந்தக் கேள்வி. பானுமதி அவர்கள் சார்ந்த சமூகத்தை பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

https://theprint.in/opinion/the-nepotism-and-caste-based-discrimination-that-exists-in-indian-judiciary/48542/

ஆனால் மதம் மாறியவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு அளித்திருக்கும் இட ஒதுக்கீட்டைப் பெற முடியுமா என்பது சர்ச்சையாக உள்ளது. கிறிஸ்தவ மதத்தில் வர்ணம் ஜாதி என்ற கோட்பாடுகளே கிடையாது.அதனால் எந்த ஒரு இந்துவும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்போது அவர் தன்னுடைய சாதிய அடையாளங்களை இழந்தவர் ஆகிறார். அப்படி இருக்கும்போது இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒருவர் தனது ஜாதி அடையாளங்களை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?

இதற்கு ஒரே காரணம் இட ஒதுக்கீடு. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது. அவர்கள் வீசி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மட்டுமே பெற முடியும்.

மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் முக்கிய பொறுப்புகளை வகிக்கலாம்.அப்படி இருக்கும்போது ஒருவர் தன்னுடைய உண்மையான மதத்தை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் தனது மதத்தை மறைக்க வேண்டும் என்று விரும்பினால் அவர் மீதான நம்பிக்கை கேள்விக்குறி ஆகிறது. தனது 32 ஆண்டுகால நீதிபதி வாழ்க்கையில் பானுமதி ஜல்லிக்கட்டு தடை உட்பட வழங்கிய பல்வேறு உத்தரவுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்படும் இட ஒதுக்கீட்டை முறைகேடாக பானுமதி பயன்படுத்தினாரா என்பது பற்றியும் விசாரிக்க வேண்டும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

பானுமதி மட்டுமல்ல!இந்து பெயரை வைத்துக்கொண்டு ஜாதி சான்றிதழ்களையும் பயன்படுத்திக்கொண்டு கிறிஸ்துவராக இருப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

இது போன்ற ஊழல்களை தடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

(சமூக வலைத்தளப் பகிர்வு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories