
இன்றிலிருந்து பிரதமர் மோடி கிசான் சன்மான் நிதி ஆறாவது வெளியீட்டு நிகழ்ச்சி தொடங்குகிறது.
நாடெங்கிலும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் போடப்படுகிறது. விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பலவித திட்டங்களை அளித்து வரும் விஷயம் தெரிந்ததே. விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சன்மான் நிதி அப்படிப்பட்ட ஒன்று.
மத்திய அரசு விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி கிசான் சன்மான் நிதி யோஜனா என்ற விவசாயிகளின் திட்டத்தை அளிக்கிறது. மத்திய அரசு இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விவசாயிகளுக்கு 6000 ரூபாய் அளிக்கிறது. மூன்று தடவையாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு இந்த பணம் வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் அரசாங்கம் பிஎம் கிசான் ஸ்கீமுக்காக 75 ஆயிரம் கோடிகள் ஒதுக்கியுள்ளது.
இன்று முதல் பிரதமர் மோடி கிசான் சன்மான் நிதி ஆறாவது வெளியீட்டின் பகுதியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் போடப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். பிரதமர் கிசான் யோஜனா திட்டம் கீழ் 8.5 கோடி பேர் விவசாயிகள் இதன் மூலம் பலன் பெறுகிறார்கள். இந்த திட்டம் ஆறாவது தடவையாக ரூ 17,000 ஆயிரம் கோடி வெளியிடுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் கிசான் சம்மான் யோஜனா 6ஆவது தடவை 2000 ரூபாய்களை விவசாயிகளின் கணக்கில் போடுகிறார்கள். பிரதமர் கிசான் சன்மான் நிதி திட்டம் இதுவரை நாட்டிலுள்ள 8 கோடியே 69 லட்சம் பேர் விவசாயிகள் பேங்க் அக்கவுண்டில் மூன்று முறையாக 6 ஆயிரம் ரூபாய்கள் போடப்பட்டுள்ளது.

பிரதமர் கிசான் சன்மான் நிதியில் பணம் சேர்க்கும் விஷயம் குறித்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் pm-kisan ஸ்கீம் சிஇஓ விவேக் அகர்வாலும் பங்கு கொண்டார். அதன்படி ஞாயிறு ஆகஸ்ட் 9ஆம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் போடும் முடிவு எடுத்தார்கள்.
டிசம்பர் 1, 2018ல் தொடங்கிய பிரதான் மந்திரி கிசான் ஸ்கீம் நிதி திட்டம் 9.9 கோடிக்கு மேலும் மேலாக விவசாயிகளுக்கு ரூபாய் 75 ஆயிரம் கோடிகளுக்கு மேலாக பணம் பெரும்படி உதவி ஏற்பாடு செய்தார்கள். இந்தத் திட்டம் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய தேவைகளுக்கும் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான பொருளாதார உதவிக்கும் உதவுகிறது.
2029 வரை அதாவது வரப்போகும் பத்து ஆண்டுகள் காலம் வரை இந்த தொகை அமலில் இருக்கும். கிராமங்களில் பார்ம் இன்ஃப்ராஸ்டிரக்சர் பூஸ்டப் செய்வதற்கும் பிரைவேட் முதலீட்டாளர்களை கவருவதற்கும் இந்த தொகை உதவியாக இருக்கும். ஃபார்ப் இன்ஃப்ராஸ்டிரக்சர் பிராஜக்ட்களுக்கு இந்த தொகையிலிருந்து சப்சிடியில் கடன் அளிக்கப்படும்.
உங்களுக்கு pm-kisan ரூ.2000 வந்து சேர்ந்ததா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இவ்வாறு செய்யுங்கள். இதற்காக… உங்கள் வங்கிக் கணக்கில் பேலன்ஸ் செக் செய்வதற்கு pmkisan.gov.in வெப்சைட்டோடு தொடர்பு கொண்டு இருக்க வேண்டும்.
அல்லது நீங்கள் மொபைலில் ஆப் மூலம் கூட பேலன்ஸ் செக் செய்து கொள்ளலாம். இந்த ஆப்பை நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும் . ஆப் மூலம் இதற்கு முன் உங்கள் கணக்கில் வந்து சேர்ந்த தொகையின் நிலைமை கூட நீங்கள் அறிந்துகொள்ளலாம். ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்து சேரவில்லை என்றால் உங்கள் வங்கி கணக்காளர் அல்லது மாவட்ட விவசாய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள். அங்கு உங்கள் பணி நடக்கவில்லை என்றால் நீங்கள் மத்திய விவசாய அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் pm-kisan ஹெல்ப்லைன் 155261 அல்லது டோல் ஃபிரீ 18002115526 நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதுமட்டுமின்றி அமைச்சகத்தின் இந்த நம்பர் 011-23381092 கூட தொடர்பு கொள்ளலாம்.