
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு! சுயமரியாதை வென்றது! – என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் எம்எல்ஏ கு.க. செல்வம். அவ்வகையில் முக ஸ்டாலினுக்கு சுயமரியாதை பாடம் எடுத்திருக்கிறார் அக் கட்சியின் எம்எல்ஏ கு.க செல்வம். ஆனால் இப்போது அவர் முன்னாள் திமுக எம்எல்ஏ ஆகியிருக்கிறார் காரணம் தற்போது தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கு.க.செல்வம். இவர் அண்மையில் தமிழக பாஜக., தலைவர் முருகனுடன் தில்லி சென்று பாஜக., தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை அடுத்து, தி.மு.க.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் கு.க.செல்வம். மேலும், கட்சியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு செல்வமும் விளக்கம் அளித்திருந்தார்.
அவர் அளித்த விளக்கங்கள்…


இந்நிலையில் இன்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அவரிடம் விளக்கம் கேட்கப் பட்டது. அவர் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை காரணத்தினால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கு.க.செல்வம், தனது டிவிட்டர் பதிவில் …