குற்றால அருவிகளில் குளிக்க தடை உத்தரவு தொடரும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரானா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் 30.08.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மறு
உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்குமென தெரிவித்துள்ளார்கள்.
அதன்படி தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான தென்காசி மாவட்டம், குற்றாலம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தடை அமலில் இருக்கும்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்தினருக்கும், காவல் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு தந்து குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.