பொறியில் சிக்கிய நரி.. காப்பாற்றிய நபர்! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
fox

ஒரு காட்டில் நரியின் கால் வேறு விலங்கிற்கு வைக்கப்பட்ட பொறியில் மாட்டிக் கொண்டதை அடுத்த அவ்வழியாக வந்த நபர் தனது உயிரை பணயம் வைத்து அந்த நரியை காப்பாற்றும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

ஒரு காட்டில் ஏதோ விலங்கிற்கு வைக்கப்பட்ட பொறியில் அவ்வழியாக வந்த நரியின் கால்கள் சிக்கி, அது தாங்க முடியாத வலியால் ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து அந்த நரியை காப்பாற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.

fox1

ஒரு கம்பை கொண்டு அதன் வாய் பகுதியை மூடிக் கொண்டு இன்னொரு கையால் அந்த பொரியை விலக்குகிறார். எனினும் வலி தாளமுடியாமல் அந்த நரி அங்கும் இங்கும் சுற்றுகிறது. எனினும் அவர் ஒரு வழியாக அந்த பொறியை எடுத்துவிடுகிறார். அடுத்த கணமே இவர் அப்பகுதியிலிருந்து ஓட்டம் பிடிக்கிறார். நரியும் ஓட்டம் பிடிக்கிறது.

இந்த வீடியோவை அந்த நபரே எடுத்துள்ளார். தரையில் போனை வைத்து விட்டு கேமராவை ஆன் செய்து எடுத்துள்ளார். அந்த நபருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அந்த சம்பவத்தை அவர் அப்படியே ரெக்கார்டு செய்துள்ளார்.

fox2

இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுனந்தா நந்தா ட்விட்டரில் பதிவிட்ட சில மணி நேரங்களில் வைரலானது. அந்த நபர்தான் உண்மையான ஹீரோ என இன்டர்நெட்டில் பாராட்டு மழை பொழிகிறது. அத்துடன் மனிதநேயத்துடன் இந்த நபர் செயல்பட்டுள்ளார் என்றும் தனது உயிரை பணயம் வைத்து ஒரு காட்டு விலங்கின் உயிரை மீட்டுள்ளார் என்றும் பாராட்டுகள் குவிகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.