
திமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் துரைமுருகன் தனது குருநாதர் ஸ்ரீ ஸ்ரீவிபூதி பாபாவிடம் சென்று ஆசீர்வாதம் பெற்ற படம் சில நாட்களாக இணையத்தில் சகல கேலி கிண்டல்களுடன் உலா வருகிறது. அருகில் அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் இருப்பதும், விபூதி பாபா நீ நாடாளுமன்ற உறுப்பினர் ஆவாய் என்று ஆசீர்வாதம் கொடுத்ததாகவும், அதனால் அவர் எம்.பி. ஆகிவிட்டதாகவும், இப்போது துரை முருகனுக்கு அப்படி ஒரு ஆசியை விபூதி பாபா கொடுத்துள்ளதாகவும் அதனால் இப்போதைய பொதுச் செயலாளர் வருங்கால முதல்வர் ஆகிவிடுவார் என்றும் கருத்துகளை அள்ளிவிட்டு வருகிறார்கள் இணையதளங்களில்
தி.மு.க துரை முருகன் நை நீ முதல்வராக வாய்ப்பு இருக்கு என்று வாழ்திய “வேலூர்” மாக தேவ மலை சித்தர் அப்போ ஸ்டாலின்
திமுகவின் பொதுச்செயலாளர் பதவி ஏற்ற பின் துரைமுருகன் அவரது மகனுடன் தனது குருநாதர் ஸ்ரீ ஸ்ரீவிபூதி பாபாவிடம் சென்று ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.
பகுத்தறிவுக் கட்சி, கடவுள் மறுப்புக் கொள்கை இவற்றில் உறுதியாக இருக்கும் திமுக., தலைவர்களுக்கு, குல்லா போட்டாலும் சிலுவையைக் கட்டிப் பிடித்துத் தொங்கினாலும் வராத திராவிட பகுத்தறிவுத் தீட்டு, நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்தால் வந்துவிடும்! இந்து ஆன்மிகவாதிகள் மீது தீண்டாமையைக் கடைபிடிக்கும் திமுக, தலைவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை மட்டும் வெளிப்படையாக ஆன்மிக வேடம் போட்டுக் கொள்ள தூண்டிவிட்டு, அதை தங்கள் அடிவருடிகள் மூலம் வீடியோ போட்டோவெல்லாம் எடுத்து இணையதளங்களில் உலவ விடுவது வழக்கமான பகுத்தறிவு அரசியல்.
இப்போது பொதுச்செயலாளர் ஆகிவிட்ட துரைமுருகன் மிகப்பரிய பக்திமான் போல் அவ்வப் போது வேடமிட்டு வெளிக்காட்டுவார். அவரது மகன் கதிர்வேல் ஆனந்த் எம்.பி ஆவதற்காக காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்து ஆன்மிகவாதிகளின் தயவை வேண்டினார்.

தற்போது, திமுக., பொதுச்செயலாளர் பொறுப்பேற்றதும் தனது குருநாதர் ஸ்ரீ ஸ்ரீவிபூதி பாபாவிடம் சென்று ஆசீர்வாதம் வாங்க சென்றார் துரைமுருகன். அங்கு விபூதி சாமியார் துரைமுருகனுக்கு ஆளுயர மாலையையும், கதிர் ஆனந்திற்கு சால்வையும் அணிவித்து அருள்வாக்கு கூறியுள்ளார். அதாவது, விரைவில் முதல்வர் ஆவீர்கள் என ஆசி வழங்கினாராம்.
விபூதிபாபா துரைமுருகனின் சொந்த ஊரான காட்பாடியை சேர்ந்தவர். இந்த விபூதிபாபா குறித்து அவ்வூரைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘எந்த முக்கியமான வேலையாக இருந்தாலும் அதற்கு முன் விபூதி சாமியாரிடம் துரைமுருகன் குடும்பம் ஆசிர்வாதம் பெற்று தான் காரியத்தை தொடங்கும். வேலுார் மக்களவைத் தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெறுவார் என விபூதி சாமியார் ஆசி கூறினார். அதன்படியே நடந்தது.
இப்போது பொதுச்செயலாளராகி இருக்கும் துரைமுருகனுக்கு விரைவில் முதல்வர் ஆவீர்கள் என அருள்வாக்கு கூறி இருக்கிறார். அப்படி நடந்தாலும் நடக்கும்’என்கின்றனர்.
இதனால்தான் கருணாநிதி தனது மகனை திமுக., தலைவர் ஆக்க வைகோ.,வை திருட்டுப் பட்டம் கட்டி திமுக.,வில் இருந்து துரத்தி விட்டார். தன் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசாத அல்ல… எண்ணியே பார்த்திராத அன்பழகனை பொதுச் செயலாளர் என டம்மியாக வைத்திருந்தார். அன்பழகனுக்குப் பின் அப்படி ஓர் அடிமை சிக்காத நிலையில், பலரும் கட்சியை விட்டு வெளியேறி வரும் இக்கட்டான சூழலில், உள்ளே வெளியே ஆட்டம் காட்டி மிரட்டல் அரசியல் நடத்தி மிரட்டலாக பொதுச் செயலாளர் ஆகிவிட்ட துரைமுருகன் இப்போது விபூதி பாபா மூலம் அடுத்த மிரட்டல் அஸ்திரத்தையும் விடுத்து விட்டார்!
ஆக… ஆக… பாலுக்கும் தோழன் பூனைக்கும் காவல் என பழமொழிக் கணக்காக இருக்கும் பக்திமான் கடைசிவரை தலைவரை சப்பான் துணைமுதல்வராகவே வைத்திருந்து ரிட்டயர்ட் ஆக்கி விடுவார் என்று கலகலக்கிறார்கள் சமூக ஊடகக் குடிமக்கள்!