
விமானத்தில் பிறந்த குழந்தை. ஆயுள் முழுவதும் இலவச பயணச் சலுகை.
டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த இன்டிகோ விமானத்தில் பயணித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு விமானத்திலேயே பிரசவம் ஆனது. தாயும் சேயும் நலமாக இருப்பதால் இண்டிகோ ஊழியர்கள் அதனை கொண்டாடினார்கள்.
அந்தப் பெண்ணின் பிரசவத்திற்கு விமான சிப்பந்திகள் உதவினார்கள்.
டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த 6E 122 விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக மேற்கொண்டு விவரங்கள் எங்களிடம் இல்லை என்று இன்டிகோ குறிப்பிட்டுள்ளது.
கிடைத்துள்ள செய்திகளின்படி… அந்த ஆண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் தம் விமானத்தில் இலவசமாக பயணம் செய்யும் சலுகையை இண்டிகோ நிர்வாகம் அளித்துள்ளது என்று குறிப்பிட்டார்கள்.
விமானத்தில் பிறந்த அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு இண்டிகோ ஊழியர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள், வீடியோக்கள் நெட்டில் வைரலாகப் சுற்றிவருகின்றன.
அதேபோல் அந்தப் பெண் தன் குழந்தையோடு விமானத்திலிருந்து இறங்கியதும் இண்டிகோ ஊழியர் செய்த செலிப்ரேஷன் போட்டோ, வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.



