
‘பிளிப்கார்ட்’ பிக் பில்லியன் விற்பனை… அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்ஃபோன்களின் விலைப் பட்டியல்… பிளிப்கார்ட் தனது ’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை நாளை முதல் வரும் 21-ஆம் தேதி வரை நடத்த உள்ளது.
பிளிப்கார்ட் தனது ’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரை நடத்த உள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் அக்டோபர் 15-ஆம் தேதி (இன்று முதல்) சலுகைகளைப் பெறுவார்கள்.
வரவிருக்கும் இந்த விற்பனையின்போது எஸ்.பி.ஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை வழங்கும். மேலும், பிக் பில்லியன் டேஸ் விற்பனையின்போது வாங்குபவர் களுக்கு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், மின்னணு கேஜெட்டுகள், உடைகள் மற்றும் பலவற்றில் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்க உள்ளது.