
தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவி களிலும் இரண்டாவது நாளாக வெள்ளம் பெருக்கு நீடிக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம், ஐந்தருவி, பழையக் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர் இருப்பு ஒரே நாளில் 7.10 அடி உயர்ந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு 5940 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையின் நீர் இருப்பு 101.40 அடியாக உள்ளது.
அதேபோல சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து அணையின் நீர் இருப்பு 122.64 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணையில் ஒரே நாளில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து அணையின் நீர் இருப்பு 70.90 அடியாக உள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
(15-10-2020)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 101.40 அடி
நீர் வரத்து : 5940.506 கனஅடி
வெளியேற்றம் : 506 கனஅடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 122.64
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 70.90 அடி
நீர் வரத்து : 1464 கனஅடி
வெளியேற்றம் : NIL
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 49 அடி
நீர் இருப்பு: 10.25 அடி
நீர் வரத்து: Nil
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 08.65 அடி
நீர்வரத்து: Nil
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 35.50 அடி
நீர்வரத்து: 217 கன அடி
வெளியேற்றம்: 50 கன அடி
மழை அளவு:
பாபநாசம்: 28 மி.மீ
சேர்வலாறு: 27 மி.மீ
மணிமுத்தாறு: 3.6 மி.மீ
கொடுமுடியாறு: 23 மி.மீ
அம்பாசமுத்திரம்: 3 மி.மீ
சேரன்மகாதேவி: 1 மி.மீ
நாங்குநேரி: 1.50 மி.மீ
ராதாபுரம்: 13 மி.மீ
நெல்லை: 1 மி.மீ
தென்காசி மாவட்டம் கடையம் இராமநதி அணை இந்த வருடத்தில் 3வது முறையாக நிரம்பியது. 84 அடி கொண்ட அணையில் நீர்வரத்து 140 கனஅடியாகவும், வெளியேற்றம் 140 கன அடியாகவும் உள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
(15-10-2020)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 80 அடி
நீர் வரத்து : 490 கன அடி
வெளியேற்றம் : 75 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 82 அடி
நீர்வரத்து : 399.67. கனஅடி
வெளியேற்றம் : 140 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 69.23 அடி
நீர் வரத்து : 77கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 31 கன அடி
வெளியேற்றம்: 31 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 132.22 அடி
நீர் வரத்து 120 கன அடி
நீர் வெளியேற்றம்: 120கன அடி
மழை அளவு:
கடனா: 22 மி.மீ
ராமா நதி: 35 மி.மீ
கருப்பா நதி: 19.5 மி.மீ
குண்டாறு: 35 மி.மீ
அடவிநயினார்: 30 மி.மீ
ஆய்க்குடி 6.26 மி.மீ
சிவகிரி 1.மி.மீ
செங்கோட்டை: 18.மி.மீ
தென்காசி: 16.40மி.மீ