மதுரையில் வேலுடன் ஆர்ப்பாட்டம் செய்யப் புறப்பட்ட பாஜக.,வினரை போலீஸார் தடையை மீறியதாகக் கூறி, கைது செய்தனர்.
தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத் தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாகக் கூறி, பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்
விருதுநகரில் வேல் யாத்திரைக்கு புறப்பட்ட, விருதுநகர் கிழக்கு மாவட்ட வர்த்தக பிரிவு பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதில் கிழக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் V சுப்புராஜ்,மாவட்ட செயலாளர்கள் கலைமகள் ஜெயராமன்,K செந்தூர்பாண்டியன்,M நாகராஜ்,கிழக்கு ஒன்றிய தலைவர் முருகன்,மாவட்ட IT பிரிவு தலைவர் S J பிரதீப்,மாவட்ட துணைதலைவர் P அழகர்சாமி மற்றும் மாவட்ட, நகர,,ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.