வன்முறையை தூண்டும் விதமாகவும், வேல்யாத்திரையை இழிவு படுத்தியதாகவும் இயக்குநர் கௌதமன் மீது போலீஸில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
பாஜக.,வால் நடத்தப்படும் வேல் யாத்திரையை இழிவுபடுத்தியும், வன்முறையை தூண்டும் விதத்திலும் பேசி வரும் தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான கௌதமன் மீது போலீஸ் எஸ்பியிடம் பாஜக மாநில விவசாயி அணி துணைத் தலைவர் முத்துராமன் புகார் அளித்துள்ளார்.
பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமன் தலைமையில் உசிலம்பட்டி பகுதியிலிருந்து 200-க்கு மேற்பட்ட பாஜகவினர், திரண்டு வந்து மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பி சுஜித்குமாரிடம், இயக்குநர் கௌதம் மீது துரித நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில த் தலைவர் முருகன் நடத்தி வரும் வேல் யாத்திரையை இழிவுபடுத்தி, சமூக வலை தளங்களில்
அவதூறாக பேசி வரும் இயக்குநர் கெளதமன், பாதிரியார் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி விவசாய அணி மாநில துணைத் தலைவர் தலைமையில் முத்து ராமன் தலைமையில் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாநில சிறுபான்மையினர் அணி கல்வாரி தியாகராஜன்,மாவட்ட தலைவர் சிறில் ராயப்பன்,துணை தலைவர் அப்துல் ஹமீது,வழக்கறிஞர் ரமேஷ்,பாலமேடு மாவட்ட விவசாய அணி செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர் .