
தமிழக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகர் ராஜசிம்மன்.
தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’ என்ற பெயரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடந்து வரும் இவ்விழாக்களில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர்.
அதன்படி, இன்று மதுரை மாவட்டத்தில் பாஜக தமிழ் மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்ட, நம்ம ஊரு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

அந்த விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்த மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகர் ராஜசிம்மன்.
அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் ஜித்தன். இதையடுத்து இருவரும் மாநில தலைவர் முருகனிடம் வாழ்த்து பெற்றனர்.