
மத்திய அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக, மதுரை கே.கே. நகரில் ஜனக் கல்யாண் என்ற பெயரில் புதிய அலுவலகத்தை பாஜக நிர்வாகிகள் திறந்து வைத்துள்ளனர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி நலத்திட்டங்கள் வழங்கும் அமைப்பின் கீழ் மதுரை கேகே நகர் காமராஜர் சாலையில் உள்ள இடத்தில் தென்மாவட்டங்களின் தலைமை அலுவலகம் ராஜாராம்
தலைமையில், எஸ் ஆறுமுகம் பிள்ளை, பிள்ளைமார் சங்க மாநிலத் தலைவர் முன்னிலையில், திறக்கப் பட்டது.
பாரதப்பிரதமர் ஜென் கல்யாண காரிய பிரசார், பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களை, தென் மாவட்டங்களில் உள்ள அடிமட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான அரசாங்க நிதி மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தும் வகையில் மோடி அவர்களின் விவசாய வேளாண் திட்டங்களை கொண்டு பயன் அடையும்படி மற்றும் ஆயிஷ் பாரத் உஜ்வாலா தூய்மை இந்தியா போன்ற திட்டங்களின் செயல் வடிவங்களை எளிமையான வகையில் மக்களுக்கு சென்றடையும் வகையில் தென் மாவட்டங்களில் உள்ள சுமார் 15 16 மாவட்டங்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மதுரையில் இன்று அலுவலகம் சிறப்பாக திறக்கப்பட்டது.
விழாவில் ,மாநிலத் தலைவர் திரு ராஜாராம் மாநில பொதுச் செயலாளர் விஜய் வீர் மாநில துணைத் தலைவி எஸ் பொன்னுத்தாய், மாவட்டத் தலைவர் பாஸ்கரன் மற்றும் இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அனைத்து மகாசபை பிள்ளைமார் தலைவர் எஸ் ஆறுமுகம் பிள்ளை கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
மேலும் , இந்த அமைப்பின் மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நற்செய்தியின் அமைப்பின் செயல் விளக்கங்களையும் ஏழை எளிய மக்களுக்கு புரியும் வகையில் தெரிவிக்கப்பட்டது . மேலும், வரும் 25 -ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் பயனடையும் படி மிகப்பெரிய மருத்துவ முகாம் ஒன்று செயல்பட உள்ளது.
முகாமில், முதியோர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள் வந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.