
நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் தனிப்பட்ட மெசேஜ், பணப் பரிவர்த்தனை, பயனர் சிம் கார்டு, செல்போன் மாடல், பேட்டரி அளவு, பயன்படுத்தும் ஓ.எஸ்., பிரவுசர் மற்றும் ஐபி முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தனது சர்வரில் சேகரித்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தாம் ஒப்பந்தம் வைத்துள்ள பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து கொள்ளும் வகையில் வாட்ஸ் அப்பில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.
மேலும், வாட்ஸ்ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இதனை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு வாட்ஸ் ஆப் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த பயனாளர்கள் பலரும், வாட்ஸ் ஆப்புக்கு பதிலாக டெலிகிராம் மற்றும் சிக்னல் உள்ளிட்ட செயலிகளுக்கு மாறி வந்தனர். மேலும், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி குறித்து அந்நிறுவனம் ஏழு வரியில் புது விளக்கம் அளித்திருக்கிறது.
வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் அனுப்பும் தனிப்பட்ட குறுந்தகவல்களை பார்க்கவோ அல்லது அழைப்புகளை கேட்கவோ செய்யாது.
குறுந்தகவல் அனுப்புவோர் மற்றும் அழைப்பை மேற்கொள்வது யார் என்பதை வாட்ஸ்அப் கண்காணிக்காது.
வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் பகிர்ந்து கொள்ளும் லொகேஷனை பார்க்க முடியாது.
வாட்ஸ்அப் பயனரின் காண்டாக்ட்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளாது.
வாட்ஸ்அப் குரூப்கள் தொடர்ந்து தனியாகவே செயல்படும்.
குறுந்தகவல் மறைந்து போக செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
பயனர் தங்களின் டேட்டாவை டவுன்லோட் செய்ய முடியும்.
இது போன்ற தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனாளர்கள் இன்னும் குழப்ப நிலையிலேயே உள்ளனர். வாட்ஸ்அப் மட்டும் இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமானோர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டவுன்லோட் செய்ய முடியும்.
இது போன்ற தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனாளர்கள் இன்னும் குழப்ப நிலையிலேயே உள்ளனர். வாட்ஸ்அப் மட்டும் இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமானோர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.