
சமூக ஊடகங்களை குறித்து விழிப்புடன் இருக்குமாறு தனது வாடிக்கையாளரை SBI வங்கி எச்சரித்துள்ளது.
தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. நூதன முறையில் பணம் பறிப்பது, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பண மோசடி செய்வது என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மோசடிகள் மொபைல் செயலிகள், வலைத்தளங்கள் மூலமே நடக்கிறது.
இந்நிலையில் சமூக ஊடகங்கள், தவறான செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி SBI அறிவித்துள்ளது. வங்கி கிளையை தொடர்பு கொள்ள SBIயின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும், கூகுள் தேடலின் போது எச்சரிகையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
வங்கி கிளையை மொபைல் அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளும் போதும் உங்கள் ATM நம்பர், பின்நம்பர் போன்ற எண்களை வங்கி ஊழியர்கள் கேட்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் வங்கி தொடர்பான விவரங்களை மொபைலில் குறிப்பு எடுத்து வைப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ATMல் பின் நம்பரை மறைத்து வைத்து அழுத்துவது, ATM கார்டிலேயே பின் நம்பரை எழுதாமல் இருப்பது உங்களுக்கு பாதுக்காப்பாக இருக்கும். மேலும் பின் நம்பர்கள் எளிதில் யூகிக்க கூடிதாக இருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர். மினஞ்சல், குறுஞ்செய்தி வாயிலாகவும் உங்கள் வங்கி விவரங்களை நிறுவனம் கேட்பதில்லை எனவும், மொபைல் செயலிகள் உங்கள் மொபைலை ஹேக் செய்யாமல் இருக்க எச்சரிகையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
SBI customers are requested to be alert on Social Media and not fall for any misleading and fake messages.#CyberSecurity pic.twitter.com/KBMiWbMlxa
— State Bank of India (@TheOfficialSBI) January 25, 2021