
மகேஷ் பாபு கீர்த்தி சுரேஷ் நடிக்கும். படத்தின் ஷூட்டிங் துபாயின் முக்கிய இடங்களில் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடக்க இருக்கிறது. படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே மகேஷ் பாபு ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார்கள்.
படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது சோசியல் மீடியாக்களில் பெரும் ஹிட்டடித்திருக்கிறது. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தப் படம் குறித்து #SarkaruVaariPaata என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கினர்.
டிவிட்டர் வரலாற்றிலேயே 100 மில்லியன் ட்வீட்களைப் பெற்ற முதல் டேக் என்ற சாதனையை மகேஷ் பாபு படம் பெற்றிருக்கிறது. இதுகுறித்து படக்குழுவும் ஒரு போஸ்டை டிவிட்டரில் பதிவிடவே, அதுவும் உலகமகா ஹிட்டடித்திருக்கிறது. கீதா கோவிந்தம் படப் புகழ் பரசுராம் இந்தப் படத்தை இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் ஏழு ஆண்டுகள் இடைவேளைக்குப் பின் மகேஷ் பாபு – இசையமைப்பாளர் தமன் கூட்டணி மீண்டும் சேர்ந்திருக்கிறது.
100M tweets on #SarkaruVaariPaata 🔥
— TollywoodBoxoffice.IN (@TBO_Updates) January 24, 2021
First Ever Movie Tag to Reach 100M tweets, @urstrulyMahesh fans Created Unique Record💥💥#100MOnSarkaruVaariPaata
(Note: SarkaruVaariPaata Movie Shoot yet to Start!!)