இருட்டில் வெள்ளையாக உருவம் ஒன்று நடந்து செல்வது போன்ற வீடியோ பரவலால் காக்காபாளையம் பகுதி மக்கள் வெளியே வருவதற்கே அச்சப்பட்டு வீடுகளில் முடங்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து காக்காபாளையம் செல்லும் வழியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில், இரவு நேரத்தில் பயணிக்கவே பலரும் பயப்படுவர்.
அந்தளவிற்கு சிறிதளவு வெளிச்சமும் இன்றி கும்மிருட்டாக இருக்கும் அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சிலர், வெள்ளை நிற உடையில் அமானுஷ்ய உருவம் ஒன்று நடந்து செல்வதை பார்த்துள்ளனர்.
பின்னர் அவ்வுருவம் உலாவுவதை அவர்கள் தங்களது செல்ஃபோனிலும் பதிவு செய்தனர். 30 விநாடிகள் வரை எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், வெள்ளையான உருவம் ஒன்று நடந்து செல்கிறது.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவால், காக்காபாளையம் பகுதி மக்கள் இரவு நேரத்தில் பேய் உலவுவதாக வெளியே வராமல் அச்சத்தில் உள்ளனர்.