
12 வருடங்களுக்கு முன்பு தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை காட்டுக்குள் பார்த்து தன் அன்பை பகிர்ந்து கொண்டது காட்டு யானை.
தாய்லாந்தில் கால்நடை மருத்துவர் Pattarapol Maneeon காட்டுப்பகுதி வழியாக ஒரு வேலைக்காக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு யானை பிளிரும் சத்தம் கேட்டது.

அவருக்கு விலங்குகள் எதற்கு சத்தம் போடுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்பதால் அவர் அந்த யானை உள்ள பக்கம் நோக்கி சென்றார்.

அந்த யானை Plai Thang(31) கடந்த 12 ஆண்டுக்களுக்கு முன்பு காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மருத்துவர் Pattarapol Maneeonனிடம் வந்துள்ளது. அதற்கு சில மாதங்கள் சிகிச்சை அளித்த மருத்துவர் யானை குணமானதும் வனத்துறை உதவியுடன் காட்டில் விட்டுள்ளார்.

இப்போது மருத்துவர் வருவதை தூரத்தில் இருந்து பார்த்த காட்டு யானை Plai Thang அவரை அழைக்க பிளிறியது. அதை புரிந்துகொண்ட Maneeon அதனிடம் செல்ல, Plai அவருக்கு வணக்கம் தெரிவிப்பதற்காக அவரை நோக்கி தன் துதிக்கையை நீட்டியிருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக மருத்துவரும் கைகளை நீட்டி அதனை தொட்டார்.
ஒரு காட்டு யானை 12 ஆண்டுகளுக்கு முன் சந்தித்த மனிதரிடம் அன்பை பரிமாறிக்கொண்ட தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானைக்கு ஞாபகசக்தி அதிகம் என்பதை காட்டும் நிகழ்வாகும் உள்ளது.



