மதுரை, சென்னை, நாகர்கோயில், புதுச்சேரி, தில்லி… சிறப்பு ரயில்கள்!

train

மதுரை – டெல்லி நிஜாமுதீன், மதுரை – சென்னை, தாம்பரம் – நாகர்கோவில் (அந்தியோதயா), புதுச்சேரி – கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்கள் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

வண்டி எண் 06155 மதுரை – டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் வாரம் இருமுறை சேவை அதிவிரைவு சிறப்பு ரயில் ஏப்ரல் 20 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மதுரையிலிருந்து ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் அதிகாலை 00.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 06.35 மணிக்கு நிஜாமுதீன் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06156 டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் – மதுரை வாரம் இருமுறை சேவை அதிவிரைவு சிறப்பு ரயில் ஏப்ரல் 22 முதல் மறு அறிவிப்பு வரும் வரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிகாலை 05.20 மணிக்கு புறப்பட்டு வியாழன் மற்றும் சனிக்கிழமை அதிகாலை 00.05 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், விஜயவாடா, பல்ஹார்ஷா, நாக்பூர், போபால், ஜான்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

வண்டி எண் 06158 மதுரை – சென்னை எழும்பூர் வாரமிருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து ஏப்ரல் 17 முதல் மறு அறிவிப்பு வரும் வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 06.55 மணிக்கு சென்னை சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06157 சென்னை எழும்பூர் – மதுரை வாரமிருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து ஏப்ரல் 18 முதல் மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.10 மணிக்கு மதுரை சென்று சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வண்டி எண் 06191 தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா தினசரி சேவை சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து ஏப்ரல் 26 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 02.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06192 நாகர்கோயில் – தாம்பரம் அந்தியோதயா தினசரி சேவை சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 27 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாலை 03.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.25 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வண்டி எண் 06861 புதுச்சேரி – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 11 முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதுச்சேரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.10 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06862 கன்னியாகுமரி – புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 12 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கன்னியாகுமரியில் இருந்து திங்கட்கிழமைகளில் மதியம் 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.40 மணிக்கு புதுச்சேரி சென்று சேரும். இந்த சிறப்பு ரயில்கள் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். புதுச்சேரி – கன்னியாகுமரி சிறப்பு ரயில் வள்ளியூர் ரயில் நிலையத்திலும், கன்னியாகுமரி – புதுச்சேரி சிறப்பு ரயில் சீர்காழி, கடலூர் துறைமுகம், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Entertainment News

Popular Categories