மு.க.ஸ்டாலின் குடும்பத்தாருடன் ஓய்வெடுக்க… கொடைக்கானல் பயணம்!

Published:

stalin to kodaikanal
stalin to kodaikanal

நீலக் கலர் சபாரி உடையில் ஸ்டாலின் தனி விமானத்தில் குடும்ப உறுப்பினர்கள் 17 பேர் உடன் மதுரை நோக்கி பயணம் மேற்கொண்டார். அவர் கொடைக்கானலில் ஓய்வெடுக்கச் செல்வதாகக் கூறப்பட்டது.

ஸ்டாலின் குடும்பத்தினர் இரண்டு தனி விமானங்களில் மதுரை புறப்பட்டு சென்றனர். 4 நாட்கள் கொடைக்கானலில் ஓய்வு எடுக்கின்றனர் என்றும் தேர்தலுக்குப் பின்னர் அவர்கள் ஓய்வு எடுக்கச் செல்வதாகவும் தகவல் வெளியானது.

மு.க.ஸ்டாலின், அவர் மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, அவரின் வாரிசுகள் நிலானி, நளன், உதயநிதியின் மனைவி கிருத்திகா, அவர் குழந்தைகள் இன்பன், தன்மயா ஆகியோர் ஒரு விமானத்திலும், உதயநிதி, சபரீசன், கார்த்திகேயன், ரேவதி, காவ்யா, கவிநிலா, ஷிவான், அத்யான் ஆகியோர் ஒரு விமானத்திலும் சென்றுள்ளதாக தகவல் வெளியானது.

Related articles

Recent articles

spot_img