
மதுரை: மதுரை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.மதுரை அருகே சோழவந்தானில் சனீஸ்வர ஆலயத்தில் சனிப்பெயர்ச்சியை யொட்டி, டிச.27-ம் தேதி ஞாயிறு காலை சனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சணைகள் நடைபெறுகிறது.
இதேபோல், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்தில் டிச. 27-ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு சனீஸ்வரலிங்கம் மற்றும் சனி பகவானுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி இளஞ்செழியன், கணக்கர் பூபதி ஆகியோர் செய்து வருகின்றனர்.
மதுரை நகரில்……
மதுரை ஆவின் பாலவிநாயகர் ஆலயத்தில் ஞாயிறு காலை 7 மணிக்கும், மதுரை அண்ணாநகர் வைகை காலனி மேற்கு பகுதியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் ஞாயிறு காலை 7 மணிக்கு சனிப்ரீதி ஹோமங்களும், துலாம், கடகம், கும்பம், மிதுனம், மகரம், மீனராசி நேயர்களுக்கு சிறப்பு அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறனும் செய்துவருகின்றனர்.
மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் ஞானசித்தி விநாயகர் கோயிலில் ஞாயிறு காலை 8 மணிக்கு சனிப்பெயர்ச்சியை ஒட்டி ஹோமங்களும், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் காலை 10 மணிக்கு யோக சனீஸ்வரனாக வீற்றிருக்கும் சனி பகவானுக்கு, ப்ரீதி ஹோமங்களும் மற்றும் பரிஹார அர்ச்சணைகளும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
ஞானசித்தி விநாயகர் ஆலயத்தில் டிச.27-ல் சனிப்பெயர்ச்சி பரிகார பூஜை!
மதுரை: மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் அருள்மிகு ஞானசித்தி விநாயகர் ஆலயத்தில் இம் மாதம் 27..ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சனிப் பெயர்ச்சியை யொட்டி, மஹாயாகமும், பரிஹார அர்ச்சணைகளும் நடைபெறுகிறது.ஹோமத்துக்கு பக்தர்கள் நெய், பழங்கள், கறுப்பு வஸ்திரம், கறுப்பு எள்ளூ ஆகியவை வாங்கித் தரலாம்.மேலும், தனுசு, மகரம், கும்பம், துலாம், கடகம், மிதுனம் ராசி நேயர்களுக்கு சிறப்பு அர்ச்சணைகள் நடைபெறும்.பரிஹார அர்ச்சணைக்கு ரூ. 70..கட்டணம் கோயிலில் செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.