
கைரேகைகளில் இருக்கும்
குறிகளை கொண்டு ஒருவருக்கு
ஏற்படும் நன்மை, தீமை மற்றும் மரணம் ஆகியவற்றை அறிந்துக்கொள்ள முடியும்.
கைரேகைகளில் மச்சம் (மீன்) போன்ற குறி அமையப் பெற்றவர்களுக்கு செல்வ வளம் கிடைக்கும். மேலும் இந்த ரேகை குருமேட்டில் காணப்பட்டால் உயர் பதவி வகிப்பார்கள்.
குடை, கொடி, ஸ்வஸ்திகம், தாமரை மலர் அல்லது மொட்டு குறிகள் போன்றவை கைரேகையில் ஒருவருக்கு இருந்தால் செல்வமும், தர்ம சிந்தனையும், உயர்ந்த குணங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கைரேகையில் சிவலிங்கம் போன்ற
குறி காணப்பட்டால் சிவனை வழிபடுவதில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.
ஏணிக்குறி போன்ற அமைப்பு கைரேகையில் இருந்தால் வாழ்க்கையில் படிப்படியாக பதவிஉயர்வும், செல்வமும் கிடைக்கும்.
ஒருவர் செல்வந்தராக கடின உழைப்பு என்பது மிகவும் அவசியம். ஆனால்,
ஜோதிடம் ரீதியாக சில
ராசிக்காரர்களுக்கு இயற்கையிலேயே செல்வந்தராகும் யோகம் உண்டு.
சதுரம், வட்டம், தீவு மற்றும் பெருக்கல் போன்ற குறிகள் கைரேகையில் அமைந்தால் இடத்திற்கு ஏற்ப
பலன்கள் ஏற்படும்.
சங்குக்குறி போன்ற அமைப்பு கைரேகையில் இருந்தால் ஸ்ரீகிருஷ்ண
பரமாத்மாவே கையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
நட்சத்திரகுறி இருந்தால் கைரேகையில் கொடுத்து வைத்தவர்களாகவும்
,திறமையானவர்களாகவும் இருப்பார்கள்.
வட்டம் மற்றும் புள்ளி போன்ற குறி கைரேகையில் அமையப் பெற்றவர்கள் சீரான கவனம், உறுதியான முடிவு மற்றும் எந்நேரத்தில் ஒரு வேலை கொடுத்தாலும் செய்து முடிக்கக்கூடிய திறன் கொண்டவராக இருப்பார்கள்.
செவ்வக வடிவ குறி கைரேகையில் இருந்தால் பாதுகாப்பு மற்றும் தைரியம்மிக்க நபராக இருப்பார்கள்.