December 6, 2025, 10:02 AM
26.8 C
Chennai

மீட்டிங் ஆனாலும் சூட்டிங் ஆனாலும் விவேக் சொன்னதை செய்வேன்: வையாபுரி!

vaiyapuri on vivek memories
vaiyapuri on vivek memories

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டோம் என்ற செய்தி வரும் வரை விவேக் தனது கடைசி பேச்சில் தெரிவித்தபடி… அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை… மீட்டிங் ஆனாலும் சரி சூட்டிங் ஆனாலும் சரி.. அனைத்து இடங்களிலும் நான் வலியுறுத்துகிறேன் என திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்.

மறைந்த நடிகர் விவேக்கின் கனவை நனவாக்கும் வகையில் ஒரு கோடி மரம் நடும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து அமைப்புகளையும் ஒன்று சேர்த்து ஒரு கோடி மரம் நடும் திட்டத்தை செயல்படுத்துவோம் என மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர்.சரவணன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

மறைந்த திரைப்பட நடிகர் விவேக்கிற்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி திரைப்பட நடிகரும் மருத்துவரும் பாரதிய ஜனதா கட்சியின் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான டாக்டர்.சரவணன் பாரதி யுவகேந்திரா அமைப்பின் நிறுவன தலைவர் நெல்லை பாலு உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார் அதனை தொடர்ந்து மதுரை சரவணா மருத்துவமனையில் சூர்யா அறக்கட்டளை மற்றும் பாரதி யுவகேந்திரா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விவேக் திரு உருவ படத்திற்கு மலர் அஞ்சலியும் அஞ்சலி கூட்டமும் நடைபெற்றது

மலர் மாலையினால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் திருவுருவ படத்திற்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி திரைப்பட நடிகரும் டாக்டரும் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளருமான டாக்டர்.சரவணன் பாரதி யுவ கேந்திரா அமைப்பின் நிறுவன தலைவர் நெல்லை பாலு உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்

பின்னர் மறைந்த நடிகர் விவேக் படத்தின் முன்பாக நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரம் நடும் முயற்சிக்கு தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருவோம்,அனைத்து அமைப்புகளையும் ஒன்று சேர்த்து நடிகர் விவேக் கனவு கண்ட ஒரு கோடி மரம் நடும் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என சபதம் எடுத்துக்கொண்டனர்

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட நடிகர் வையாபுரி, விவேக் ஒரு சிறந்த நடிகர் அவர் நடித்த படத்தில் வரும் ஒவ்வொரு வசனத்திலும் மக்களுக்கு ஏதாவது ஒரு கருத்தை முன்வைத்து அதை தெளிவுபட எடுத்துக் கூறுவார்.

ஆகவே அவர் நம்மை விட்டு பிரிந்த நேற்று முதல் நான் ஒரு சபதம் எடுத்து இருக்கிறேன்

அவர் இறப்பதற்கு முன்பாக கடைசியாக மக்களுக்கு சொன்னது கொரோனாவிற்கான தடுப்பூசியைப் போட்டு கொள்ளுங்கள் அதற்காகத்தான் நான் அரசு மருத்துவமனையில் ஊசி போட்டு கொள்கிறேன் ஆகவே மக்கள் இந்த தடுப்பூசியை எடுத்து கொள்ளவேண்டும் என கூறினார்

அவருடைய கனவை நனவாக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் நாம் கொரனோ தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன் என்று சொல்லும் வரை நான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த கருத்தை வலியுறுத்துவேன் இதுதான் எனது சபதம் இந்த சபதத்தை நான் நேற்றே எடுத்து விட்டேன் ஆகவே இனி நான் பங்கேற்கும் மேடைப்பேச்சு ஆகட்டும் சாதாரண சாதாரண கூட்டம் ஆகட்டும் மீட்டிங் ஆகட்டும் சூட்டிங் ஆகட்டும் அனைத்து இடங்களிலும் அனைவரும் கொநோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து பேசுவேன் தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு விட்டோம் என்ற நிலை வரும் வரை நான் இந்த கருத்தை வலியுறுத்தி கொண்டே இருப்பேன் இதுதான் நான் விவேக் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன் என கூறினார்,

அதனைத்தொடர்ந்து பேசிய டாக்டர் சரவணன், நடிகர் விவேக் அவர்களின் முயற்சியான ஒரு கோடி மரம் நடும் முயற்சிக்கு எங்களுடைய சூர்யா அறக்கட்டளை மற்றும் மரம் நடும் முயற்சியை எடுக்கும் அனைத்து அமைப்புகளையும் ஒன்று சேர்த்து அவருடைய கனவான ஒரு கோடி மரம் நடும் திட்டத்தை நனவாக்குவோம் என கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories