
புதிய கொரோனா பரவலுடன் கூடிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தன கடைகள் அடைப்பு – மேலும் காலை 8 மணிக்கே டாஸ்மாக் கடைகள் திறப்பு.
கொரனோ 2 வது அலை பரவி வரும் இந்த சூழ்நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று 258 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரனோ ஊரடங்கு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமல்படுத்தப்பட்டது. காலை 6 மணி முதல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகளான தேர்நீர் கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
பெரிய கடைகள் திறக்க அனுமதி இல்லை என்பதால் அவைகள் பூட்டப்பட்டு இருக்கின்றன. டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அவை திறக்கப்பட்டன. ஆர்வமுடன் மது பிரியர்கள் காலை முதலே மது பான வகைகளை வாங்கிச் செல்கின்றனர்.
கரூர் நகரில் ஜவஹர் பஜார், கோவை சாலை, மேற்கு பிரதட்சணம் சாலை, செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரிய கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி இல்லை என்பதால் பார்சல் வழங்கி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 80 சதவீத கடைகள் பூட்டப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது