ஏழுமலையான் ஆசியால் பெரிய நிலை அடைந்தேன்: பெருமாளை தரிசித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
thirupathi 2
thirupathi 2

திருமலை ஏழுமலையான் கோயிலில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி.ரமணா தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தார்.

ஏழுமலையானை வழிபட வியாழக்கிழமை இரவு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.ரமணா குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அன்று இரவு ஏகாந்த சேவையில் கலந்து கொண்ட அவர் இரவு திருமலையில் தங்கினார்.

வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை வழிபட சென்ற அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தரிசனம் முடித்து திரும்பிய நீதிபதிக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்து தீா்த்தம், லட்டு , வடை உள்ளிட்ட பிரசாதங்கள், திருவுருவப்படம் வழங்கி சேஷ வஸ்திரம் அணிவித்தனர்.

ramana
ramana

பின்னர் கோயிலை விட்டு வெளியில் வந்த அவர் அகண்டம் அருகில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டார். பின்னர், ‘திருமலை ஏழுமலையான் ஆசீா்வாதத்தால் மட்டுமே தான் இந்த நிலையை அடைந்துள்ளதாகவும், அவரை வழிபட்டதால் தன் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன’ என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறினார் பின்னா் திருச்சானூர் சென்று தாயாரை தரிசித்து தில்லி புறப்பட்டுச் சென்றார்

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.