சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிரான தனது விமர்சனங்களை முன்வைத்தவர் கிஷோர் கே ஸ்வாமி. வலைத்தளப் பதிவராக, யூடியூபராக, டிவிட்டர்வாசியாக எந்நேரமும் சமூகத் தளங்களில் இயங்கி வந்த இவர், நேற்று திமுக., அரசால் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
இவரது கைது விவகாரம் சமூகத் தளங்களில் பெரிதாக எதிரொலித்தது. இவரது கைதை கண்டித்தும் எதிர்த்தும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகியவற்றின் வழியே வைரலான சில கருத்துகள்…
அமைப்பு ரீதியாக ஒலிக்க வேண்டும்!
கிஷோர் ஸ்வாமி கைது என்பது ஆட்டைக் கடித்து இப்போது மாட்டைக் கடித்திருக்கும் விவகாரம். அடுத்தடுத்து மனிதர்கள் வரிசையாகவே காத்திருக்கிறார்கள்.
இந்த விஷயம் தனிப்பட்ட விவகாரம் அல்ல. இது ஹிந்துத்துவ சிந்தனை கொண்டவர்கள் அடுத்தடுத்துக் குறிவைத்துத் தாக்கப்படுவதன் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ள ஒரு நிகழ்வு.
இவருக்குப் பின்புலமாக வலுவான ஹிந்து அமைப்புகள் களம் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- அமைப்பு ரீதியான எதிர்ப்புகள் ஓங்கி ஒலிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரும் அவரைப் போலவே ஹிந்துத்துவக் கருத்துகளை ஆதரிப்பவர்களும் தனித்து விடப்பட்ட அனாதைகளாகி விடுவார்கள்.
- மொத்ததில் அவர் பேசிய விஷயம் ஒன்றுமே இல்லை – வழக்கம் போல திராவிட குப்பைகளை அவர் எடுத்துச் சொல்லி இருக்கிறார். அவர் கூறியுள்ள விஷயங்களைப் பொது வெளியில் அனைத்து ஹிந்துத்துவ அமைப்பினரும் ஒருமித்த குரலில் பேச வேண்டும்.
திராவிட முகமூடியைக் கிழிப்பவர்களின் குரல்வளையை நெறித்து விடலாம் என்று நினைப்பவர்களுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தும். அவர்கள் மறைத்து விட நினைக்கும் விஷயங்கள் பூதாகாரமாகக் கிளம்பினால் அவர்கள் தாமாகவே அடங்கி விடுவார்கள்.
உதாரணம்: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சுக்கு வீரமணி வகையறாக்கள் கண்டனம் தெரிவித்ததும் இத்தகைய குரல்வளையை நெறிக்கும் முயற்சியே. ஆனால், ரஜினிக்கு ஆதரவாக ஒலித்த குரல்கள் ஏராளமான பழைய கிளறி விட்டன. திக, திமுகவின் நோக்கத்தில் மண் விழுந்தது. இனிமேல் ரஜினி விஷயத்தில் அவர்கள் அடக்கி வாசிப்பார்கள்.
அதேபோல, கிஷோர் ஸ்வாமி பேசிய விஷயங்கள் பொதுவெளியில் பரவலாகப் பேசப்பட்டால் திமுகவினரின் கொட்டம் அடங்கும்.
- தலைவர்கள் பற்றி அவதூறுக் கருத்துகளைப் பரப்பினார் என்பது கிஷோர் ஸ்வாமி மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இதை ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் ஒரு முன்னுதாரணமாகக் காட்டி, பல்வேறு தேசத் துரோகிகள் மீது காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும். கிஷோர் ஸ்வாமியைக் கைது செய்தது போலவே அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியதும் அவசியம்.
இதுவரை எத்தனையோ பேர் மீது இத்தகைய புகார்கள் தரப்பட்டிருந்தாலும் அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், கிஷோர் ஸ்வாமி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இது பாரபட்சம் அல்லவா என்பது பொதுவெளியில் பேசப்பட வேண்டும், நீதிமன்றங்களிலும் விவாதப் பொருளாக வேண்டும்.
இவை என்னுடைய கருத்துகள். இந்த விவகாரத்தில் பிறருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் –
கிஷோர் ஸ்வாமி கைது சாதாரண விஷயம் அல்ல. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து… என்று அடுத்ததாக எத்தனையோ யூட்யூப், ப்ளாக பத்திரிகையாளர்கள் குறி வைத்துத் தாக்கப்படுவார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன்.
ஏனெனில், பொதுவெளிகளில் – குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் – நமக்கு ஆதரவுக் குரல் தருபவர்களின் மனதில் அச்சத்தை விதைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்துத்துவ அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்தப் பிரச்சினையில் குரல் கொடுக்க வேண்டியதும், கிஷோர் ஸ்வாமிக்குப் பாதுகாப்புத் தர வேண்டியதும் அவசியம்.
ஊதுகிற சங்கை ஊதி வைக்கிறேன்.
முழித்துக் கொள்வதும் படுக்கையிலேயே கிடப்பதும்
அவரவர் விருப்பம்.
- வேதா டி.ஸ்ரீதரன்
கிஷோர் கே சாமி கைது..!! அடுத்து என்ன ..?
கிஷோர் கே சாமி கைது..!! அடுத்து என்ன ..??!! by KARTHIK GOPINATH #kishorekswamy_arrest
திமுக.,வின் அடக்குமுறை அரசியல்!
திமுக வேறு வழியே இல்லாமல் தன் அடக்குமுறை அரசியலைக் கையில் எடுத்துள்ளது. யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற மனநிலைக்கு வந்துள்ளது. ஏன் என்றால் அனைத்து வகையிலும் நிர்வாக தோல்வி, இன்று கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளைக் கூட சிந்திக்காமல் மதுக்கடைகளைத் திறக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது.
அரசு மருத்துவமனைகளில் சேரும் கொரொனா நோயாளிகளில் சக்கரை நோய் உள்ளவர்களுக்கு உரிய மருந்தை வெளியில் வாங்கி தரச் சொல்லிவிட்டு, அதை அரசு கணக்கில் எழுகிறார்கள் என்பது வரை மோசமான நிர்வாகம் மாநிலம் முழுவதும் மக்கள் கடும் கோபத்தில் வெறுப்பில் உள்ளனர். தற்போது அதைத் திசை திருப்ப மீடியா மாபியா கும்பலை வைத்து வித விதமான வேடிக்கை காட்டுகிறது, மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கிறது திமுக. அதற்கு மீடியா பெரும்பாலும் சலாம் போடுகிறார்கள்.
இந்த நிலையில் அடக்குமுறைக்கு எதிராக, சட்டத்தை தன் வசதிக்கு வளைக்கும் திமுக தலைமை குடும்பத்திற்கு எதிராகப் பிரதமர் அலுவலகம் ஆரம்பித்து, குடியரசுத் தலைவர் தொட்டு உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சேர்க்க வேலை செய்வோம்.
ஒவ்வொரு நபருடைய முயற்சியும் நிச்சயம் சரியான பலன் தரும்.
அரசைக் கேள்வியே கேட்கக் கூடாது என்பது தான் திமுக அரசு கைது மிரட்டல்கள். ஆனால் உச்ச நீதிமன்றமும், பிரதமர் அலுவலகமும் , குடியரசுத் தலைவர் அலுவலகமும் இந்த அரசு கேள்வி கேட்கும் நிலைக்குத் தள்ளுவோம்.
நாளை விவரம் வெளியிடுகிறேன்.
–மாரிதாஸ்
இதுவரை இது… யாருக்குமே தெரியாதே..!
அண்ணாதுரை பற்றி பாரதிதாசன் சொன்னதற்கு கிஷோர் கே சுவாமியை கைது செய்திருக்கிறது விடியல் அரசு…. அண்ணாதுரை பற்றி பாரதிதாசன் சொன்னது புத்தகமாகவே வெளியே வந்திருக்கிறது. 👇👇👇👇👇
அண்ணாதுரை பற்றி பாரதிதாசன் சொன்னதற்காக நாங்கள் என்னடா செய்ய முடியும்….
அதை நீங்கள் பாரதிதாசனிடம் தான் கேட்க முடியும்…..
இதுவரை இது பெரும்பாலான யாருக்குமே தெரியாது….
இவரை கைது செய்ய போய் இனி எல்லோரும் அது என்னவென்று படித்து பார்ப்பார்கள்
ஒரு காலத்தில்… கடுமையாக விமர்சிக்கப்பட்டவரே அவர்தான்!
அண்ணாதுரை பற்றி பாரதிதாசன் எழுதிய புத்தகத்தின் உள்ள வரிகளை தான் கிஷோர் முகநூலில் பதிவிட்டுள்ளார். அண்ணாதுரை படிதாண்டிய பத்தினி அல்லாதவர் என்பது உலகறிந்த உண்மை. அதேசமயம் தமிழரின் மாபெரும் இலக்கியமும், வைணவர்களின் ஒப்பற்ற நூலுமான கம்ப ராமாயனத்தை “கம்பரசம்” என எழுதி ஆபாசமாக சித்தரித்ததை யாரும் மறக்க முடியாது
வெள்ளையன் அந்நூலை தடை செய்தான், ஏன் அண்ணாதுரையே முதல்வரான பின் அந்நூல் கிடைக்காதவாறு தடுத்து வைத்தார்
மானமுள்ள இந்துக்கள் இருந்தால், நல்ல தமிழறிஞர்கள் தமிழ்பற்றுள்ளவர்கள் இருந்தால் அந்த “கம்ப ரசம்” நூலை வெளிகொண்டு வரலாம். அந்த ஆபாச நூலுக்கு தண்டனையாக அந்த சமாதியினை இல்லாமல் செய்ய அரசு தயாரா?
அண்ணாதுரை எக்காலமும் இங்கு சர்ச்சைக்கு உள்ளானவரே, பசும்பொன் தேவர் அவரை பகிரங்கமாக மதுரையில் எச்சரித்த வரலாறெல்லாம் வரலாற்றில் உண்டு. வேறு விவகாரங்களில் கிஷோர் கைதாகியிருந்தால் சரி , ஆனால் அண்ணாவினை விமர்சித்தார் அதற்காக கைது என்பதெல்லாம் காமெடி ரகம்
காரணம் ஒருகாலத்தில் மிக கடுமையாக விமரிசிக்கபட்டவர் அண்ணாதான்
தன்னை பற்றிய அவதூறுகள் எழுதபட்ட சுவரில் விளக்கு வைத்து மக்கள் இரவிலும் அதை படிக்க வேண்டும் என்ற அளவில் பேசி அதை கடந்து சென்றவரும் அவர்தான்! திமுகவினருக்கு தங்கள் கட்சியின் வரலாறு தெரியவில்லை என்பதுதான் நிஜம், தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் கிளம்பமாட்டார்கள்..
https://pagadhu.blogspot.com/2021/01/blog-post_0.html
கருத்துச் சுதந்திர காவலர்கள்
ஆளுநருக்கும் நிர்மலா தேவிக்கும் தொடர்பு என எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் பரப்ப நக்கீரனுக்கு கருத்து சுதந்திரம் உண்டு.
நிர்மலா தேவி கழுத்தில் ஜெஸ்ஸி முரளிதரன் முகம் ஒட்டி சித்தரிக்க முகநூல் முஸ்லீம் மீடியாக்கு கருத்து சுதந்திரம் உண்டு.
தலித்துகள் நீதிபதியானது திமுக போட்ட பிச்சை என்று ஏளனம் பேச ஆர். எஸ். பாரதிக்கு கருத்து சுதந்திரம் உண்டு.
பார்ப்பண நாய்கள்; நீதிமன்றம் அல்ல, “உச்சி குடுமி மன்றம்” என பேச டேனியல் காந்திக்கு கருத்து சுதந்திரம் உண்டு.
“யோவ்! வெள்ளத்தாடி ஒத்தைக்கு ஒத்தை வாய்யா” என பிரதமரை பேச அம்மணி சுந்தரவள்ளிக்கு கருத்து சுதந்திரம் உண்டு.
“குடியரசு தலைவரை மானங்கெட்ட கழுத” என பேச சீமானுக்கு கருத்து சுதந்திரம் உண்டு.
“ஆண்டாள் தாயாரை” “தாசி” என பேச வைரமுத்துவுக்கு கருத்து சுதந்திரம் உண்டு.
“அசிங்கமான பொம்மை இருந்தா அது கோவில்”னு பேச திருமாவளவனுக்கு கருத்து சுதந்திரம் உண்டு.
“ராமர் தொட்டதால அணிலுக்கு மூணு கோடுன்னா சீதைக்கு ஒடம்பெல்லாம் கோடு இருக்குமா?” என இஸ்லாமிய கூட்டத்தில் பேச நாகை திருவள்ளுவனுக்கு கருத்து சுதந்திரம் உண்டு.
தயாநிதி மாறன், ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் இருவருக்கும் என்ன உறவு? என பேச கருத்து சுதந்திரம் உண்டு.
ஆனால்,…
கருணாநிதி, அண்ணாத்துரை, ஈவேரா பற்றிய உண்மை விமர்சனம் என்றால் அது மட்டும் அவதூர் பரப்புதல்..
கைது செய்ய வெட்கம் ஈனம் மானம் இருக்கா..?
கேவலமான அரசியலில் ஈடுபடும் திமுக
மக்களுக்களித்த வாக்குறுதியில் ஏதாவது ஒன்று செய்ததா.?
திமுகவின் சரித்திரம் தெரியாதவர்களுக்கு கிஷோர் கே சாமி கைது செய்யபட்டதால் அது தெரிய வந்தது.
ஆண்மகன் கிஷோர் கே சாமி. #DMKFails
- ஜெஸ்ஸி முரளிதரன்
கிரி படத்துல வர்றா மாதிரி… ஆளாளுக்கு …
இந்த கிஷோர் கே சாமி மேட்டர் என்ன யா?
அது வந்து நம்ம திராவிட தலைவர் அண்ணாத்துரையை தப்பா பேசிட்டானு சொல்றாங்க…
அண்ணாவையே தப்பா பேசிட்டானா? அப்போ அவனை சும்மா விடக்கூடாது, அப்படி என்ன யா சொன்னான்?
அண்ணா ஆரம்ப காலத்துல காசு இல்லாம இருக்கும் போது,அவங்க அக்கா மகளை காஞ்சிபுரத்துல இருந்த செல்வந்தர் பொன்னப்பா என்பவர் வீட்டுக்கு நைட்ல கூட்டிட்டு போய் விட்டுட்டு, வாசல்லயே காவல் காப்பாராம், வந்த வேலை முடிந்ததும், அக்கா மகளை திரும்ப கூட்டிட்டு வந்துருவாராம்…
என்ன கருமம்டா இது? வீரபாகு பேக்கரி கதை மாதிரி இருக்கு, எவ்வளவு தைரியம் இருந்தா இந்த கிஷோர் கே சாமி இப்படி அவதூறு பேசி இருப்பான்…
அட இத சொன்னதே, நம்ம திராவிட புரட்சி கவி பாவேந்தர் பாரதிதாசன் தான், தன் குயில் இதழ் என்ற புத்தகத்தில் 30/09/1958 ல குரல் 1 இசை 18 ல அண்ணாத்துரையா எனக்கு பொற்கிழி அளித்தார் என்ற தலைப்பில் அண்ணாவை பத்தி இப்படி கேவலம் கேவலமா 4 தொடர்கதை எழுதி இருக்காரு…
அதுல இது ஒரு சின்ன பீசு தான், இன்னும் நிறைய இருக்கு, அதெல்லாம் வெளியே சொன்னா பெரிய அசிங்கம், பாரதிதாசன் எழுதுன விசயத்தை தாங்க இந்த கிஷோர் கே சாமி ஆதாரத்தோடு வெளியே சொல்லிட்டான்…
அப்போ இதை எழுதுன பாவேந்தர் பாரதிதாசன் மீது தான நடவடிக்கை எடுக்கனும், ரெண்டு பேருமே நம்ம ஆளுங்க தான, இப்போ அண்ணாக்கு முட்டு குடுக்குறதா இல்ல பாரதிதாசனுக்கு முட்டு குடுக்கறதானு தெரியலயே, அவனை கைது பண்ணாம சும்மா இருந்திருந்தா கூட இந்த விசயம் எல்லாம் வெளியே வந்துருக்காது…
இப்படி உ.பிஸ் லாம் சேர்ந்து அண்ணா எனும் திராவிட தேரை இழுத்து தெருவுல விட்டுட்டீங்களேடா…
இப்போ கிரி படத்துல மாதிரி ஆள் ஆளுக்கு கேள்வி கேட்பானுகளே…
மஞ்சள் மய மகிமை!
இது உண்மையா என்று ஒரு புகைப்படத்தை இன்பாக்ஸில் அனுப்பி விவரம் கேட்டிருந்தார் நண்பர்…..ஆதாரத்துடன் உரித்து போடுகிறேன்.
என்னடா உங்க திராவிட வரலாறு இப்படி நாறுதேடா ?
1958ம் ஆண்டு ‘தான்’ நடத்திய குயில் வார இதழில்தான் பாரதிதாசன், அண்ணாதுரையை இப்படி கேவலமாக விமர்சித்து எழுதினார்.
‘அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?’ எனும் தலைப்பில் நாலு தொடர் கட்டுரைகளை எழுதினார் பாரதிதாசன். அந்தக் கட்டுரையில் உள்ள வரிகள்தான் இணைக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது.
ஆதாரம் : குயில் இதழ், குரல் – 1, (30-9-1958), இசை -18
அதில் அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார் எனும் தலைப்பில் வெச்சு செய்கிறார் புர்ச்சி கவிஞர் பாரதிதாசன்
பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் தன் அக்கா பொண்ண கூட்டிட்டு போயி, ராத்திரி கோடிஸ்வரன் பொன்னப்பா கிட்ட கூட்டிக் கொடுத்து, அவர் பலான வேலையை முடிக்கும் வரை வெளியே காத்திருப்பார் என்று இந்த அடியேன் சொல்லவில்லை, புர்ச்சிக்கவிஞர் என்று திராவிட கூட்டங்களால் வானளாவ புகழப்படும் பாரதிதாசன் சொல்கிறார்.
இதைவிட ஒருத்தன அசிங்கப்படுத்த முடியுமா ? இல்ல இதைவிட ஒருத்தன் அசிங்கப்படதான் முடியுமா ?
ஐயா திராவிட மான்புமிகு தலைவர்களே இதை அடியேன் சொல்லவே இல்லை. மக்களுக்கு ஒரு உண்மையை கொண்டு செல்கிறேன் அவ்வளவே. வேண்டுமானால், தலைவர்களை அவமதித்தார்னு பாரதிதாசன் ஆவிய உள்ள தள்ளிடுங்க !!!
தமிழன் என்றொரு இனமுண்டு தனியாய் அவனுக்கொரு குணமுண்டுனு உருட்டறது எல்லாம் உண்மைதான் போல.
நீங்கள்ளாம் பத்ம சேஷாத்திரி ஸ்கூல பத்தி பேசறீங்களே நாக்கு அழுகிடாதா சார்வாள் ?
பாசிச பாதையில் திமுக.,
ஜனநாயகத்தை பழிவாங்கும் நோக்கத்தில் அரசாட்சி செய்வதில் தனது வழக்கத்தை கிஷோர் கே ஸ்வாமி விசயத்திலும் செய்திருக்கிறது திமுக. இந்த நீதியை அவர்களுடைய கட்சி சார்ந்தவர்கள் மீது வைத்துக் கொள்ள மாட்டார்கள்.உலகின் மிகப் பெரிய ஜனநாயக பேரரசான பாரதத்தின் பிரதமரை தூக்கில் தொங்க வேண்டும் என்று சொன்ன திமுகவின் பிரசன்னா மீது இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுக்குமா?
கிஷோர் கே ஸ்வாமி மீது அரசு வைத்த குற்றச்சாட்டு கூட முந்தைய காலங்களில் ஒருவர் மீது ஒருவர் சுமத்திய பகிரங்கமான குற்றச்சாட்டுகள் தான் அதை தற்காலத்தில் கிஷோர் நினைவு செய்திருக்கிறார்.
வாழ்வில் கடந்து வந்த பாதையில் சில நடப்புகளையும், பிண்ணனி களையும் பெரும் போர்வையிட்டு மறைக்க முயற்சி செய்கிறார்கள்.ஆண்டவன் கட்டளைப்படி மாறி,மாறி பேசும் பொருளாகவே இருக்கும்.
தமிழக அரசு கிஷோர் கே ஸ்வாமியை கைது செய்து சிறையில் அடைத்தாலும் அவர் நினைவு செய்து பேசியது பலர் அறியும் பொருளாகி உள்ளது.
- Amk மணிவண்ணன்
சட்டம் பாய்கிறது…
செலக்டிவ் அம்னீஷியாவுடன்!
அண்ணாதுரை விளக்கு பிடித்த கதையை பாரதிதாசன் எழுத, அதை கிஷோர் ஸ்வாமி பகிர… பாய்ந்தது ‘சட்டம்’!!!
என்னங்கடா உங்க நியாயம்? சட்டம்? செலக்டிவா பாயுது?
இது நீதிமன்றத்தில் செல்லாது என்றாலும் கிஷோர் ஸ்வாமியை harassment செய்ய உதவும். மேலும் “அண்ணாதுரை விளக்கு பிடித்த” விவரம் ஊரெல்லாம் தெரியவரும்! பாரதிதாசன் புத்தகங்கள் மேலும் விற்பனை ஆகும். (நானும் வாங்கப்போகிறேன்)
குறிப்பு: மத்திய அரசு கொண்டுவரும் அவதூறு பேச்சு திருத்தங்கள், சட்ட திருத்தங்கள், பொதுமக்களின் பில் ஆஃப் ரைட்ஸ் (உரிமைகள்) எல்லாம் நடைமுறைக்கு வரும்போது இம்மாதிரி கைதுகள் நிற்கும்.
“கிஷோர் கே.சாமி மீது 353, 505(1),(சி), 501 (1) (பி) ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.” – புகழ் ஜி பதிவுகள்.
1, மத்திய அரசையோ மற்ற தலைவர்களையோ கேவலமாக விமர்சித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொன்னால் இது கருத்து சுதந்திரம் என பேசிய கூட்டம் இதற்க்கு என்ன சொல்வாங்க… ஆக இன்று கருத்து சுதந்திரம் ஊர் மேய சென்று விடும்….
2, இதுக்கு தான் கைதாம்.. இதுக்கு கைது பண்ணனும் என்றால் பாரதிதாசனை அல்லவா கைது பண்ணனும். ஏன்னா இதை புஸ்தகமா போட்டது பாரதிதாசன். அதை தான் இப்ப சொன்னதுக்கு கைதா. கருப்பர் கூட்டம், ஆம்னிபஸ் சு.வள்ளி, சூசைடு பிரசன்னா இவனுங்களுக்கு எல்லாம் இருந்த கருத்து சுதந்திரம் இப்ப இங்க போனதாம்…
- செல்வ நாயகம்
சி.என்.அண்ணாதுரைக்கும், தனக்கும் இடையே நிகழ்ந்த பிரச்னைகளை, பாரதிதாசன் குயில் இதழில் எழுதியிருந்தார். அந்தப் பக்கங்கள்! குயில் ஏட்டில், அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்? என்ற தலைப்பில் பாரதிதாசனால், 30.09.1958இல் எழுதப் பட்ட தொடர் கட்டுரைகளில்…