
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நகைக்கடை உரிமையாளரின் 70ஆவது பிறந்தநாளுக்கு அவரது மருமகள் 70 வகையான உணவுகளை சமைத்து அசத்தியுள்ளார்.

கமுதியில் நகைக் கடை வைத்திருப்பவர் கணேசன்.

இவரது எழுபதாவது பிறந்த நாளன்று அவரது மருமகள் 70 வகையான சைவ உணவுகளை சமைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

வயதான மாமியார், மாமனார், பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு குடும்பம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றது.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.





