
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் தனது புத்தகத்திற்கு வைத்துள்ள பெயர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை கடந்த 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு தைரமூர் அலிகான் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் இரண்டாம் முறையாக கர்ப்பமுற்றுள்ளதாக கரீனா அறிவித்தார்.
அதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அந்த புத்தகத்தில் தனது இரு கர்ப்பங்களின் மூலமாகவும் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் அனுபவித்தவற்றின் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மற்றும் கர்ப்பகாலத்தில் ஒரு தாய் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஒரு புத்தகத்தில் எழுதி வெளியிட்டுள்ளார் கரீனா.
இந்த புத்தகத்திற்கு PREGNANCY BIBLE என பெயரிடப்பட்டது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தை விற்பனை செய்ய கரீனா, தொடர்ச்சியான பதிவுகளையும் விளம்பரங்களையும் வெளியிட்டு வருகிறார்.

கரீனா தனது புத்தகத்தை தனது மூன்றாவது குழந்தை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மராட்டிய மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த அல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்கத் தலைவர் ஆசிஷ் ஷிண்டே என்பவர், இந்தப் பெயர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக புத்தகத்திற்கு பெயர் வைத்திருப்பதாக பீட் நகரில் உள்ள சிவாஜி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த பூகாரில், புத்தகத்தின் பெயரில் இடம் பெற்றுள்ள வார்த்தையான பைபிள், கிறிஸ்தவர்களின் புனித நூலாக உள்ள நிலையில், கரீனா கபூர் தனது புத்தகத்திற்கு பைபிள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவாஜி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாய்நாத் தொம்ப்ரே கூறுகையில், “நாங்கள் புகாரைப் பெற்றுள்ளோம், ஆனால் சம்பவம் இங்கு (பீட் நகரில்) நடக்காததால் இங்கு வழக்கு பதிவு செய்ய முடியாது. மும்பையில் புகார் அளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.