
இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது முக்கிய அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய வங்கி கணக்கு திறப்பது முதல், புதிய சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய முக்கியமான ஆவணத்தை மக்கள் வங்கி கணக்குகளுடன் இணைப்பதனால், அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் பரவி வருகிறது. இதற்கு தற்பொழுது ஆதார் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்கிறது. வங்கி சேவைகள் உள்பட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் அட்டை விபரங்கள் அவசியமாக இருக்கிறது.
ஆதார் ஆணையத்தால் (UIDAI) விநியோகிக்கப்படும் 12 இலக்க எண் கொண்ட இந்த அட்டையின் விபரங்களை தற்பொழுது போது மக்கள் தங்களின் வங்கி கணக்கு, PAN கணக்கு போன்ற பிற முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் வெளியான ஒரு செய்தியில், ‘வங்கிகளில் முக்கிய சேவைகளைப் பெற பொது மக்கள் வங்கிக் கணக்குடன் தங்களின் ஆதார் விபரங்களை இணைக்க வேண்டியது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது,
இது பாதுகாப்பானது இல்லை என்றும், ஆதார் எண் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கை முடக்கி பணத்தைத் திருட முடியும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியைக் கண்டு பொது மக்கள் குழப்பமடைந்தனர்.
பொதுமக்களிடம் உருவாகியுள்ள இந்த தேவையற்ற குழப்பத்தை நீக்கம் செய்ய, இதுகுறித்து ஆதார் ஆணையம் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது. ஆதார் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின் படி, ”முதலில் பொது மக்கள் யாரும் இந்த போலி செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல், வெறும் ஆதார் எண்ணை மட்டும் வைத்து, வங்கிக் கணக்குகளை மூன்றாம் நபர் யாரும் முடக்கம் செய்ய முடியாது” என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளனர். எப்படி வங்கி பயனர்களின் ஏடிஎம் கார்டு எண்ணை மட்டும் வைத்து மூன்றாம் நபர்கள் பணத்தைத் திருட முடியாதோ, அதேபோல் தான், வெறும் ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு மூன்றாம் நபர்கள் யாரும் வங்கிக் கணக்கை முடக்கம் செய்யவோ அல்லது பணத்தைத் திருத்தவோ முடியாது” ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது



