
கடலாடி அருகே சாத்தங்குடி வெள்ளாங்குளம் கண்மாயின்நடுவே நேற்று சிலை ஒன்று கண்டெடுக்கப் பட்டது.
தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு சாத்தங்குடி வெள்ளாங்குளம் கிராம கண்மாயில் கிடைத்த சிலையை ஆய்வு செய்ததில், மருதுபாண்டியர்களின் சிலை என்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் கூறியதாவது; கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட சிலை 1 மீ.,உயரம் கொண்டதாகும். அகலம் அரை மீ.,கனஅளவு கால் மீ.,சுற்றளவு உள்ளது. சிலையில் மருது சகோதரர்கள் தலைப்பாகை அணிந்தும், கழுத்தில் அணிகலன்களுடன் இரு கைகளையும் கூப்பியவாறு ஒரே கல்லில் புடைப்பு சிற்பமாக காட்சி தருகின்றனர்.
நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டு, கம்பீரமான மீசையுடன் உள்ளனர். பொதுவாக மருதுபாண்டியர்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்கள், மண்டபங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட வகையில் உள்ளது, என்றார்.