December 5, 2025, 4:13 PM
27.9 C
Chennai

சிக்கிய மோசடி கும்பல்! எச்சரிக்கும் சைபர் கிரைம்!

cyber crime
cyber crime

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் கடந்த 04.01.2021ம் தேதி செல்போனில் பேசிய அறிமுகமில்லாத நபர் SBI வங்கியிலிருந்து பேசுவதாக அறிமுகபடுத்தி கொண்டு கிரெடிட் கார்டுக்கு பரிசு பொருள் வந்திருப்பதாகவும் உடனடியாக கிரெடிட் கார்டின் விவரங்களை கூறினால் உடனடியாக கிடைக்கும் என்றும் இல்லையென்றால் பரிசு பொருள் கிடைக்காது என ஆசை வார்த்தை கூறி இவரின் SBI மற்றும் HDFC வங்கி கிரெடிட் கார்டுகளின் எண்கள், ரகசிய குறியீட்டு எண்களை கேட்டு (OTP) பெற்று அந்த தகவலை உபயோகித்து அடுத்த சில நிமிடங்களில் கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து ரூ. 1,08,740/- ஐ எடுத்து ஏமாற்றி விட்டனர்.

இது தொடர்பாக கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின் பேரில் தில்லியில் முகாமிட்டு தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் S.பிரபாகரன், ஆய்வாளர் புஷ்பராஜ், உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், சுரேஷ்குமார், தலைமை காவலர்கள் ஜெகந்நாத், ஸ்டாலின், கோமதி, சுபஜாராணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் மேற்படி மோசடி கும்பலுக்கு உதவியாக இருந்த தில்லி ஜோரிபூரை சேர்ந்த அதுல்குமார் மற்றும் காசியாபாத்தை சேர்ந்த குணால் ஆகியோரை 30.07.2021 அன்று கைது செய்து ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தும் தில்லி கர்கர்டுமா நீதிமன்றத்தில் ஆஜர் செய்து டிரான்சிட் ரிமாண்ட் உத்தரவுபடி இன்று எழும்பூர் சிசிபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

atm
atm

புலன் விசாரணையில் மோசடி பேர்வழிகள் தில்லி, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் போலியான கால்சென்டர்கள் வைத்து தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் செல்போனில் வங்கியிலிருந்து பேசுவதாக சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு பரிசு தொகை வந்திருப்பதாக கூறி கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் ரகசிய குறியீட்டு எண் விவரங்களை பெற்றும் தில்லியில் ஏஜென்சிகள் மூலம் மின்கட்டணம் செலுத்துவோரின் மின்கட்டண விவரங்களை தில்லி ஏஜெண்டுகளிடமிருந்து பெற்றும் அந்த மின்கட்டணங்களை தமிழ்நாட்டிலிருந்து பெற்ற கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து பணத்தை செலுத்தி பின் மேற்படி ஏஜென்சிகளுக்கு அதிகப்படியான கமிஷன் தொகை கொடுத்து அவர்களிடமிருந்து ரொக்கமாக பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

மேற்படி அதுல்குமார் மற்றும் குணால் ஆகியோர் அதிக கமிஷனுக்கு ஆசைபட்டு மின்கட்டணத்தை மேற்படி மோசடி பேர்வழிகள் மூலம் செலுத்தியது தெரிய வந்து கைது செய்யப்பட்டனர்.

மற்ற நபர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர். செல்போன் மற்றும் DTH ரீசார்ஜ் போன்றவற்றின் மூலமாகவும் மேற்படி மோசடி பேர்வழிகள் ஈடுபட்டுள்ளனரா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

adhul kumar kunal
adhul kumar kunal

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்டுக்கு உச்ச வரம்பை உயர்த்துவதாக கூறியோ, பரிசு தொகை வந்துள்ளது என்றோ, ரிவார்டு பாயிண்டுகள் வழங்குவதாக கூறியோ, ஏ.டி.எம். கார்டு முடக்கப்பட்டுள்ளது, வங்கி கணக்கை ஆதார் கணக்குடன் இணைக்க வேண்டும், கொரோனா நிவாரண தொகை வந்துள்ளதாக கூறி வங்கி கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு / ஏ.டி.எம். கார்டு எண்கள், ரகசிய குறியீட்டு எண்களை நபர்களிடம் எந்த தகவலையும் தர வேண்டாம் என்றும் உஷாராக இருக்குமாறும் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் தங்களது செல்போன், DTH போன்றவற்றை ரீசார்ஜ் செய்யும்போது அங்கீகரிக்கப்படாத ஏஜென்சிகளிடம் செய்ய வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories