
மோட்டோரோலா பிராண்டின் முதன்மை ஸ்மார்ட்வாட்ச் ஆன மோட்டோ 360 (3வது ஜென்), இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் மே மாதத்திலேயே பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டது. இது இப்போது இ-காமர்ஸ் தளம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த பிரீமியம் ஸ்மார்ட்வாட்சின் அம்சங்களில் AMOLED பேனல், ஸ்னாப்டிராகன் வேர் 3100 சிப் மற்றும் பல அம்சங்கள் அடங்கும். அதன் அம்சங்கள் மற்றும் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மோட்டோ 360 (3வது ஜென்) ஸ்மார்ட்வாட்ச் 1.2 அங்குல வட்டமான AMOLED டிஸ்ப்ளே 390 x 390 பிக்சல் ரெசல்யூஷன், கார்னிங் கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் வலது விளிம்பில் இரண்டு பட்டன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது பல வாட்ச் ஃபேஸ் மற்றும் இதய துடிப்பு கண்காணிப்பு, நடை எண்ணிக்கை, எரிக்கப்பட்ட கலோரிகள் மற்றும் பல அம்சங்களை கண்காணிக்கும் அம்சங்களை வழங்கும்.
இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்னாப்டிராகன் வேர் 3100 SoC உடன் 1 GB RAM மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டாரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது Google Wear OS உடன் இயங்குகிறது மற்றும் 355 mAh பேட்டரியை பேக் செய்கிறது, இது ஒரு நாள் முழுக்க பேட்டரி லைஃப் வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும், முழு பேட்டரியை சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் ஆகும். மோட்டோ 360 (3 வது ஜென்) Uber, Google Play, Messenger போன்ற பல செயலிகளையும் ஆதரிக்கிறது.
இது ஆண்ட்ராய்டு 6.0 (கோ பதிப்பைத் தவிர) அல்லது iOS 12.0 அல்லது அதற்கு மேல் இயங்கும் ஸ்மார்ட்போன்களுடன் இணக்கமானது. தவிர, மோட்டோரோலா ஸ்மார்ட்வாட்ச் 3ATM மதிப்பீட்டைக் கொண்டுள்ளது,
இது நீர்-எதிர்ப்பு திறனை வழங்குகிறது. இணைப்பு விருப்பங்களில் புளூடூத் 4.2, Wi-Fi b/g/n, NFC, GPS, GLONASS மற்றும் பிற அம்சங்கள் அடங்கும். கடைசியாக, ஸ்மார்ட்வாட்ச் 52 கிராம் மற்றும் 11.68 மிமீ தடிமன் கொண்டது.
விலை மற்றும் விற்பனை சலுகைகள்
மோட்டோரோலா மோட்டோ 360 (3 வது ஜென்) ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் ரூ.19,990 விலையில் கருப்பு மற்றும் சாம்பல் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
மேலும், ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் கார்டுகளுடன் Flipkart ரூ.1,500 தள்ளுபடியை வழங்குகிறது, அத்து ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளுடன் 5 சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக்கை வழங்குகிறது.