
தேங்காய் பால் சாமை கஞ்சி
தேவையான பொருட்கள்
சாமை அரிசி/ அரிசி/ வரகுஅரிசி – 1 கப்
தேங்காய் பால் – ஒரு பெரிய தேங்காயை கொண்டு எடுக்கவும்
வெந்தையம் – 1 1/2 தேக்கரண்டி
தண்ணீர்- 3 1/2 கப் (அ) 5 கப் (உபயோகிக்கும் அரிசியை பொருத்து அளவு மாறும்)
பூண்டு- 6 பல்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வெந்தையத்தை முன் இரவு (அ) 8 மணி நேரம் தனியே ஊற வைக்கவும்.. அரிசியை நன்கு கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் சேர்க்கவும்
அதனுடண் பூண்டு, வெந்தையம், உப்பு சேர்த்து , நன்கு வேகவைக்கவும். 3 (அ) 4 விசில் விடவும்.
தேங்காயை உடைத்து பால் எடுக்கவும்
குக்கர் ஆவி அடங்கிய பின்.. பருப்பு மத்து அல்லது கரண்டியால் சாதத்தை நன்கு மசிக்கவும்.
இதனுடன் தேங்காய் பால் சேர்த்து கிளறி … மிதமான சூட்டில் பரிமாரவும்.
குறிப்பு: முதல் இரண்டு பால் மட்டும் எடுக்கவும் சரியான அளவு உப்பு இருக்க வேண்டும், முதல் முறை செய்யும் போது .. சாப்பாட்டு அரிசி பயன்படுத்தி பார்க்கவும்..