
பயனர்களை எளிதாக ஏமாற்றி, மொபைலில் ஊடுருவி தகவல்களை திருடக்கூடிய செயலிகள் குறித்து கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆண்டுராய்டு போன்களை பாதிக்கக்கூடிய ஒரு டிரோஜன் ஃப்ளைடிராப் குறித்து ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுவரை 140 நாடுகளில் இருக்கும் ஃபேஸ்புக் பயனர்களின் கணக்குகளை இந்த வைரஸ் முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மொபைல் போன்களை ஆய்வு செய்யும் குழுவினர் வெளியிட்டுள்ள தகவலின் படி, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதவிறக்கம் செய்யப்படும் குறிப்பிட்ட செயலிகள் மூலம் இந்த வைரஸ் மொபைல் போன்களுக்குள் ஊடுருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட செயலிகளின் பயன்படுத்த ஃபேஸ்புக் மூலம் அனுமதிக்கும் போது, பயனர்கள் இதுபோன்ற சிக்கல்களை சந்திப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் கூப்பன் கோடு, கூகுள் ஏடுவேர்ட்ஸ் கூப்பன் கோடு, சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வது உள்ளிட்டவற்றை அளிக்கும் செயலிகளை பயனர்கள் தவிப்பது நல்லது என்று தெரிவித்துள்ளனர்.
ஜாவஸ்கிரிப்ட் பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் இருந்து தகவல்கள் எடுக்கப்படுகிறது. ஆய்வாளர்கள் அளித்த தகவல்களை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம், பிளே ஸ்டோரில் சிக்கலுக்கு வழிவகுக்கும் செயலிகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. செயலிகள் விபரங்கள் பின்வருமாறு…
கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்கள் தவிர்க்க வேண்டிய செயலிகள்…
GG Voucher (com.luxcarad.cardid)
Vote European Football (com.gardenguides.plantingfree)
GG Coupon Ads (com.free_coupon.gg_free_coupon)
Voucher Ads (com.m_application.app_moi_6)
GG Voucher (com.free.voucher)
Chatfuel (com.ynsuper.chatfuel)
Net Coupon (com.free_coupon.net_coupon)
Net Coupon (com.movie.net_coupon)
EURO 2021 Official (com.euro2021)