December 6, 2025, 4:25 AM
24.9 C
Chennai

தாமதமாக வந்த ரயில்! காத்திருந்த பயணிகளுக்கு அடித்த அதிஷ்டம்!

train

இந்தியாவின் முதல் தனியார் ரயில், தேஜாஸ் எக்ஸ்பிரஸ், சனி-ஞாயிறு ஆகிய மூன்று பயணங்களின் போது 2.5 மணி நேரம் தாமதமானது, இதன் காரணமாக ஐஆர்சிடிசி முதல் முறையாக அதிகபட்சமாக 2035 பயணிகளுக்கு சுமார் ரூ. 4.5 லட்சம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது.

தேஜாஸ் தனியார் ரயில் தாமதமான காலத்திற்கு ஏற்ப பயணிகளுக்கு இந்த இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

train thejasvi
train thejasvi

2.5 மணி நேரம் தாமதமாக வந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) சென்ற வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாமதமாகச் சென்றது.

இதனால் அந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த 2,035 பயணிகளும் ரயிலின் வருகைக்காக அவர்களின் ரயில் நிலையத்தில் 2.5 மணி நேரம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. நேரம் பொன்னானது என்பது இப்போது முதல் முறையாக இந்தியாவில் நிரூபணம் ஆகியுள்ளது.

லக்னோ-டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸும் 1 மணி நேரம் தாமதம்
தேஜஸ் எக்ஸ்பிரஸ் சனிக்கிழமை பலத்த மழைக்குப் பிறகு புதுடெல்லி ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாகச் சென்றது.

thejasvi train
thejasvi train

இதனால் அந்த ரயிலில் பயணிக்கும் பயனர்கள் காத்திருக்க வேண்டியதானது. ஞாயிற்றுக்கிழமையில் கூட, லக்னோ-டெல்லி சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் சுமார் ஒரு மணி நேரம் தாமதமானது. இதனால் அந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளும் காத்திருக்க வேண்டியது ஆனது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஒரு தனியார் ரயில் என்பதனால் இதில் ஏராளமான தனித்துவமான சிறப்பம்சங்கள் உள்ளது. இதில் ரயில் தாமதமானால் பயணிகளுக்கு நிறுவனம் அபராதம் செலுத்தும் அம்சமும் இதில் உள்ளது.

thejasvi train station
thejasvi train station

இந்த அம்சத்தின் படி, ரயில் ஒரு மணிநேரம் தாமதமாக வருவதற்கு ரூ. 100 இழப்பீடு வழங்கப்படுகிறது. அதேபோல், இரண்டு மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக ரயில் வந்தால் ரூ. 250 இழப்பீடு வழங்கப்படும் என்று விதி உள்ளது.

இந்த பிரத்தியேக விதி காரணமாக அந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு தற்போது IRCTC பயணிகளுக்கு இழப்பீடாக ரூ. 4,49,600 திருப்பிச் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஐஆர்சிடிசி தலைமை மண்டல மேலாளர் அஜித்குமார் சின்ஹா கூறுகையில், “முதல்முறையாக 1,574 பயணிகளுக்கு ரூ. 3,93,500 திரும்பத் தரப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பயணத்தை 561 பயணிகளுக்கு ஒரு மணி நேரத் தாமத கட்டணமாக ரூ. 100 வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழியில், மொத்தம் 2,035 பயணிகளுக்கு இழப்பீடாக ரூ. 4,49,600 வழங்கப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார். IRCTC படி, தேஜாஸ் எக்ஸ்பிரஸ் லக்னோ சந்திப்பில் இருந்து சனிக்கிழமை காலை 6:10 மணிக்கு திட்டமிட்ட நேரத்தில் புறப்பட்டது.

சிக்னல் கோளாறு காரணமாக, ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் தாமதமாகப் புதுடெல்லி நிலையத்தை அடைந்தது.

thejasvi
thejasvi

அதே நேரத்தில் லக்னோ செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதமானது. சிக்னல் கோளாறு காரணமாக ஏற்பட்ட சிக்கலால் சனி மற்றும் ஞயிற்றுக்கிழமையில் பயணித்து பயணிகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

தாமதமாக வந்த ரயிலில் பயணித்த பயணிகளில் இழப்பீடிற்காக கிளைம் செய்த பயனர்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படுகிறது. சுமார் 98 சதவீத பயணிகள் ஏற்கனவே கிளைம் செய்துவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories