spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஜீப் ஓட்டி மணமகனை திருமணத்திற்கு அழைத்து சென்ற மணமகள்! வைரல் வீடியோ!

ஜீப் ஓட்டி மணமகனை திருமணத்திற்கு அழைத்து சென்ற மணமகள்! வைரல் வீடியோ!

- Advertisement -
pride drive
pride drive

தார்’ வாகனத்தில் மணமகனை ஏற்றிக்கொண்டு மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார் மணமகள் ஒருவர்.

ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த திருமணம் ஒன்றில் தான் இந்த கலகலப்பான நிகழ்வு நடந்துள்ளது.

வடக்கில் பொதுவாகவே நல்ல அலங்காரமும், கோலாகலமுமாய் தான் திருமணங்கள் நடக்கும். அந்த திருமணத்திலும் மணமகள், அவர்களின் பாரம்பரிய மணமகள் உடையை அணிந்திருக்கிறார்.

திருமணம் முடிந்த கையோடு அவர்கள் செல்ல வெளியே ‘தார்’ ஜீப் நிற்கிறது. இப்போது டிரைவர் சீட்டில் அமர்கிறார் மணமகள். மணமகனுக்கு ஒரே ஷாக்… ‘என்ன என்று கேட்கிறார்…’ வாங்க கூட்டிட்டு போறேன்… என அலங்கரிக்கப்பட்ட அந்த ஜீப்பில் அசலாட்டாக அமர்ந்து, தன் கணவரை மாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அந்த மணப்பெண்.

pride
pride

அங்கு அவர்களை வரவேற்க காத்திருந்தவர்களுக்கு காரில் வந்திறங்கிய அவர்கள் இருவரையும் பார்த்து ஒரே ஆச்சர்யம். ஆனால் மணமகள் அது எதையும் பொருட்படுத்தாமல், கணவருடன் புதிய வாழ்க்கையை தொடங்கும் உற்சாக மூடிற்கு வந்துவிட்டார்.

அப்புறம் என்ன ஆட்டம் ,பாட்டம் என மாமியார் வீட்டு நிகழ்வுகளை முடித்த கையோடு, அந்த வீடியோ வெளியே வர, இப்போது சமூக வலைதளத்தில் எங்கு பார்த்தாலும் அவர்களின் வீடியோக்கள் தான். வைரலான அந்த வீடியோவை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் காஷ்மீர் பழமைவாதிகள் சிலர், இந்த செயலை விரும்பவில்லை என்றும், அதற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe