Homeஅடடே... அப்படியா?செக்ஸ் வாழ்க்கை பற்றி நீரஜ் சோப்ராவிடம் கேட்ட ராஜீவ் சேத்தி!

செக்ஸ் வாழ்க்கை பற்றி நீரஜ் சோப்ராவிடம் கேட்ட ராஜீவ் சேத்தி!

neeraj4
neeraj4

சாதனை படைத்தவர்கள் பிரபலமாகின்றனர். ஆனால், தங்களது பிரபலத்திற்காக அவர்கள் கொடுக்கும் விலையும் அதிகம் தான்

இதற்கான அண்மை உதாரணம் இந்திய ஒலிம்பிக் கதாநாயகன் நீரஜ் சோப்ராவிற்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலை.

தனது விளையாட்டுத் திறமையால் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தாலும், அவர் பிரபலமானதற்கு பிறகு பாராட்டு வார்த்தைகளை மட்டுமல்ல, சங்கடமான கேள்விகளையும் எதிர்கொள்கிறார்.

கலை வரலாற்றாசிரியர் மற்றும் கியூரேட்டருமான (art historian and curator) ராஜீவ் சேத்தியின் கேள்வி தங்கப்பதக்கம் வென்ற ஒலிம்பிக் ஹீரோவின் வாயை அடைக்கச் செய்துவிட்டது.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் பொறுத்தவரை, அவரது டோக்கியோ சாதனைகளுக்குப் பிறகு வாழ்க்கை 360 டிகிரி திருப்பத்தை எடுத்துவிட்டது.

பிரபலங்களுக்கு பாராட்டுக்களும் வெகுமதிகளும் மட்டுகல்ல, சங்கடமான கேள்விகளையும் எதிர்கொள்ளும் சங்கடங்களும் எழுகின்றன. இதற்கு அண்மை உதாரணம் நீரஜ் சோப்ராவின் இந்த வீடியோ

தங்கம் வென்று நாயகனாகிவிட்டதால், அவரின் ஒவ்வொரு செயலும் கவனத்தை ஈர்க்கும் மையமாக மாறிவிட்டது. அவரது அந்தரங்கம் தொடர்பான கேள்விகளும் பொதுவெளியில் முன்னெழும் என்பதை அவர் இதுவரை எதிர்பார்த்திருக்கமாட்டார்.

அண்மையில் ஊடக நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட நீரஜ் சோப்ராவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார் வரலாற்றாசிரியரும் கியூரேட்டருமான ராஜீவ் சேத்தி.

விளையாட்டு வீரராக உங்கள் பாலியல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று ராஜீவ் சேத்தி கேள்வியை கேட்டுவிட்டார்.
அது விளையாட்டு வீரரான நீரஜ் சோப்ராவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி நெளிய வைத்துவிட்டது.

“நீங்கள் மிகவும் அழகான இளைஞர்” என்று ராஜீவ் சேத்தி தனது கேள்வியைத் தொடங்கினார். கோடிக்கணக்கான இந்தியர்கள் சோப்ராவிடம் ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் கேட்கத் தயங்கும் கேள்வி அது என்று சொன்ன ராஜீவ், விளையாட்டுப் பயிற்சியுடன் நீரஜ் தனது பாலியல் வாழ்க்கை (sex life) எவ்வாறு சமன்படுத்துகிறார் என்று கேட்டார்!

சோப்ரா கேள்வியைத் தவிர்க்க முயன்றார். “மன்னிக்கவும், ஐயா. நான் மன்னிப்பு கேட்பதில் இருந்தே எனது பதிலை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என்று நயமாக சோப்ரா சொன்னாலும், சேத்தி கேள்வியை விட்டு விலகவில்லை!

தடகள வீரர்கள் தங்கள் பயிற்சியை தங்கள் பாலியல் வாழ்க்கையுடன் எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வியை மீண்டும் கேட்டார். இந்த பேட்டியை ட்விட்டர் பயனர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டார். அது வைரலாகிறது.

ட்விட்டரில் பகிரப்பட்ட இடுகைக்கு பல லைக்குகள் மற்றும் கருத்துகள் இருந்தன. இந்த கேள்வியை ஏன் விராட் கோலியிடம் கேட்கவில்லை என்று ஒருவர் ராஜீவ் சேத்தியிடம் கேள்வி எழுப்பினால், மற்றொருவரோ, சேத்தியை “பண்பு இல்லாதவர்” என்று கடுமையாக சாடினார். இதுபோல், இந்த வைரல் வீடியோவுக்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

சோப்ரா கருத்து தெரிவிக்க தயங்குவதை பார்த்தாவது, பேட்டி எடுக்கும் சேத்தி அவரை விட்டிருக்கவேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் அவரிடம் இந்த கேள்வியை கேட்டு சங்கடப்படுத்திவிட்டார், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கருத்திட்டுள்ளனர்.

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,079FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,952FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Ak 61: தொடங்கியதா ஷூட்டிங்..?

அஜித் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில்...

நம்ப மாட்டோம்… இது நீங்க இல்ல… பெயிண்டிங்!

உங்க ஆத்துக்கார் அரண்மனை4 உங்கள வச்சி எடுக்கலாம் போலயே.. குண்டு குஷ்புதான் தமிழர்களின் ஃபேவரைட் ப்யூட்டி

புஷ்பா பட பாடலுக்கு இரயிலில் இளைஞரின் அட்டகாசம்! வைரல்!

புஷ்பா திரைப்படப் பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு...

Latest News : Read Now...