மனைவிக்காக 20,000 செலவில் மூங்கில் வீடு! ஆச்சரியமாக பார்த்து செல்லும் மக்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
Bamboo house
Bamboo house

ஒரு குடும்பம் 20 ஆயிரம் ரூபாய் செலவில் தாங்களாகவே உருவாக்கிய மூங்கில் வீடு, காண்போரை கவர்வதாக அமைந்துள்ளது.
அதனை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

இடுக்கி மாவட்டம் அச்சன்கோவிலைச் சேர்ந்தவர் ரதீஷ். கூலித்தொழிலாளியான இவர், அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மனைவி சவிதா. அஷ்னு, அர்ஜுன் என இரண்டு குழந்தைகள்.

கணவனும் மனைவியும் அன்றாடம் ஏலக்காய் தோட்டம் உள்ளிட்ட கூலித்தொழிலுக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை சிறுக சிறுக சேர்த்து கடந்த 7 மாதங்களுக்கு முன் 20 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் மனைவி சவிதாவிற்கு சொந்த வீட்டில் வாழ்வதற்கு ஆசையாக இருந்துள்ளது. ஆனால் சொந்த வீடு கட்ட லட்சங்கள் வேண்டும் என உணர்ந்த கணவர் ரதீஷ், சுற்றுலா தலங்களில் கண்ட மூங்கில் வீடு நினைவிற்கு வர மூங்கில் வீட்டிற்கு ,மனைவியும் குழந்தைகளும் ஒப்புக்கொண்டதை அடுத்து குறைந்த செலவில் அதுவும் 20 ஆயிரம் ரூபாய்க்குள் முழுக்க முழுக்க மூங்கில்களால் ஆன மூங்கில் வீடு தயாரானது.

வீட்டினுள் ஒரு படுக்கை அறை உள்ளிட்ட மூன்று அறைகள். முற்றத்து பூந்தொட்டிகளும் மூங்கில்களால் உருவாகி இருக்கின்றன. குளுமை தரும் மூங்கில்களால் உருவான இந்த ‘குளு குளு’ மூங்கில் வீடு ஏலத்தோட்டங்களின் பின்னணியில் அமைந்திருப்பது அழகிற்கு அழகு சேர்ப்பதாய் அமைந்திருக்கிறது. அது காண்போரை கவர்வதோடு, ஆச்சர்யப்படவும் வைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.