
கோழி, அதன் குஞ்சுகளோடு இரை தேடுவது போல் கனவு கண்டால், பழைய வீடு, மற்றும் கட்டிடங்களை சீர்செய்யும் நிலை ஏற்படும் என்று பொருள்.
சேவல் கூவுவது போல் கனவு கண்டால், மிகப்பெரிய மாற்றங்கள் நம் வாழ்வில் ஏற்பட போகின்றன என்று அர்த்தம்.
கோழியையும் சேவலையும் ஒரு சேர கனவில் கண்டால் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.
கிளிகளை கனவில் கண்டால் தொழில் விருத்தி அடையும்.
கிளிகள் தானியங்களை உண்பது போல கனவு வந்தால் நமக்கு பொருள் சேதம் ஏற்படும் என்று பொருள்.
கனவு பலன்கள் கிளி
கிளி இறப்பது போல கனவு கண்டால் கடன்கள் சேரும்.
வான்கோழி கனவில் வந்தால் நல்லதல்ல, குடும்பத்தில் சோக நிகழ்ச்சி நடைபெறும்.
மயில் தோகையை விரித்து ஆடுவது போல கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்தி வரும்.
மயில் பறந்து செல்வது போல கனவு கண்டால் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடைபெறும்.
கொக்கு கனவில் வந்தால் வயலில் விளைச்சல் அதிகரிக்கும் என்று பொருள்.
வாத்து கனவில் வந்தால் நாம் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் என்று பொருள்.
அன்னபறவையாய் கனவில் கண்டால் தெய்வ அருள் கிட்டும்.