December 5, 2025, 6:59 PM
26.7 C
Chennai

பரிமாற்றம்: இனி எந்த செயலியும் வேண்டாம்!

whatsapp
whatsapp

வாட்ஸ்அப்பில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் பயனர்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்பும் வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், அதனை அதன் ஒட்டுமொத்த பயனர்களின் ஒரு பகுதியினரால் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்போது, இந்த பேமெண்ட் அம்சத்தில் ​​ஒரு புதிய சேவையை நிறுவனம் இப்போது சோதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் மட்டும் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த சேவையைச் சோதனை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் அடுத்து வரவிற்கும் எதிர்கால அப்டேட்டில் கேஷ்பேக் அம்சத்துடன் வேலை செய்யும் என்பதை வெளிப்படுத்துகிறது.

வாட்ஸ்அப் பயனர்கள் இனி பணப்பரிமாற்றத்திற்கு என்று தனியாக ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

வாட்ஸ்அப் தொடர்பான செய்திகள், அப்டேட்டுகளை பற்றி லீக் செய்யும் பிரபல லீக்கரான WABetaInfo இன் அறிக்கை படி, வாட்ஸ்அப் சோதனை செய்யும் கேஷ்பேக் சேவையானது இந்தியப் பயனர்களுக்கான வாட்ஸ்அப் பேமெண்ட்டை உபயோகிக்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த கேஷ்பேக் கட்டண அம்சத்தை சேர்க்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பீட்டா சேவையில் இருக்கும் பயனர்களால் கூட இப்போது இந்த சேவையை அணுக முடியாது, இப்போதுதான் இது பணியில் இருக்கின்றது, இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும்.

இது குறித்த விவரங்கள் தற்போது குறைவாக இருந்தாலும், லீக்கர் ஒரு புதிய பேனரின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார். அந்த ஸ்க்ரீன் ஷாட் வாட்ஸ்அப்பில் ரிவார்டு ஐகான் உடன் “Get cashback on your next payment” மற்றும் “Tap to get started” என்ற விருப்பங்கள் இருப்பதை காண்பிக்கிறது.

லீக்கரின் கூற்றுப்படி, கேஷ்பேக் அம்சம் இந்தியாவின் UPI அக்கவுண்ட்களுக்கு மட்டுமே இருக்கும், மேலும் பயனர்கள் பணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ. 10 கேஷ்பேக் சலுகையாக வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கேஷ்பேக் அம்சம் தற்போதுள்ள வாட்ஸ்அப் பேமெண்ட் பயனர்களுக்கும் சேர்த்து வழங்கப்படுமா அல்லது முதல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் நிறுவனத்திடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை.

இந்த திட்டம் வாட்ஸ்அப் நிறுவனம் மூலம் இன்னும் வளர்ச்சியில் உள்ளது என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது. எதிர்கால அப்டேட்டில் இந்த அம்சம் வெளியிடப்படும் போது இந்த அம்சம் தொடர்பான கூடுதல் தகவல்களை நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம்.

கூகிள் நிறுவனத்தின் Gpay மற்றும் phonepe யுபிஐ ஆப்ஸ்களை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து போட்டியில் இருக்கும் நிறுவனமாக paytm திகழ்கிறது.

கேஷ் பேக் ரிவார்டு அம்சத்தை அறிமுகம் செய்து அதிக பயனர்கள் தன் வசம் ஈர்த்ததை போல், வாட்ஸ்அப் இந்த அம்சத்தை வைத்து பயனர்களை ஈர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories