சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பாக சூரிய வளிமண்டலத்திலிருக்கும் கிரகங்கள் அனைத்தும் எவ்வாறு உருவானது என்பதை ஆராய நாசா வியாழன் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளது.
அதன்படி அடுத்த மாதம் லூசி என்னும் விண்கலத்தை வியாழன் கிரகத்திற்கு யுனைடெட் லான்ச் வி 401 ராக்கெட்டுடன் அனுப்புவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.
அவ்வாறு அனுப்பப்படும் அந்த விண்கலம் வியாழன் கிரகத்திற்கு சென்று அங்குள்ள ட்ரோஜன் என்னும் விண் கற்களை ஆராயும் என்றும் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தகவல் வெளியிட்டுள்ளது.