தில்லி விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் ஒன்று பாலத்தில் அடியில் சிக்கிக்கொண்டது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தில்லி விமான நிலையத்திற்கு வெளியே தில்லி-குருகிராம் நெடுஞ்சாலையில் ஒரு நடைமேம்பாலத்தின் அடியில் ஏர் இந்தியா விமானம் சிக்கிக் கொண்டது. விமானம் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து மக்கள் குழப்பமடைந்தனர்.
அதன்பிறகு, இது ஒரு பழைய விமானம் என்று தெரியவந்தது. பின்னர், ஏர் இந்தியாவால் விற்கப்பட்ட இந்த விமானம் உரிமையாளரால் கொண்டு செல்லப்பட்டது. மேம்பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட விமானத்தின் காட்சிகள் வீடியோவாக வெளியானது. அதன்பிறகு, நெட்டிசன்கள் இதனை ஷேர் செய்து கமெண்ட் அடித்து வந்தனர்.
வீடியோவில், வாகனங்கள் நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தின் வழியாக கடந்து செல்வதைக் காணலாம், அதே நேரத்தில் மறுபுறம் மேம்பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டு நிற்கிறது. விமானத்தின் முன்பக்கம் மற்றும் அதன் மேல் பாதி சிக்கிக் கொள்ளும் முன் நடைமேம்பாலத்தின் அடியில் கடந்து விட்டது.
இது ஒரு பழைய விமானம். இந்த விமானத்தை ஏற்கெனவே விற்றுவிட்டோம். இது யாருக்கு விற்கப்பட்டது என்பது குறித்து கூடுதல் தகவல் எதுவும் இல்லை” என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மேலும், இதுதொடர்பாக தில்லி விமான நிலைய அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டபோது, உபயோகத்தில் இருக்கும் விமானம் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று கூறினார்.
“இந்த விமானம் நிச்சயமாக தில்லி விமான நிலையத்தின் கடற்படைக்கு சொந்தமானது அல்ல. வீடியோவில், அது எந்த இறக்கைகளும் இல்லாமல் கொண்டு செல்லப்படுகிறது. இது ரத்து செய்யப்பட்ட விமானம் என்று தெரிகிறது. மேலும் அதை கொண்டு செல்லும்போது டிரைவர் தவறு செய்திருக்கலாம்” என்று அந்த அதிகாரி கூறினார்.
एयर इंडिंया के दिन सच में अच्छे नहीं रहे। आसमान में जो जहाज उड़ नहीं पाये वो overbridge के नीचे फंस गये !
— Deepak Sharma (@DeepakSEditor) October 2, 2021
दिल्ली IGI एयरपोर्ट के बाहर रात की ताजा तस्वीर !! pic.twitter.com/KLCYj5nkXU
On Gurugram-Delhi highway, outside IGI airport ! pic.twitter.com/fLG0FiijkS
— Deepak Sharma (@DeepakSEditor) October 2, 2021