ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் போது இளம்பெண் ஒருவர் குத்தாட்டம் போட்டி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இணையத்தில் நாள்தோறும் வேடிக்கையான மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இதனை கண்டு களிக்கும் இணையவாசிகள் சில வீடியோக்களை வைரலாக்கியும் வருகின்றனர்.
அந்த வகையில், ATM-ல் இளம்பெண் ஒருவர் பணம் எடுக்கிறார். அப்போது அவர் தன்னை மறந்து திடீரென குத்தாட்டம் போடுகிறார். கார்டை செலுத்தும் போது, PIN எண்ணை அழுத்தும் போது, பணத்தை எடுக்கும் போது என தொடர்ந்து தன்னை மறந்து நடனமாடுகிறார்.
அந்த பெண் மகிழ்ச்சியாக நடனம் ஆடும் வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ 12 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ ghantaa என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளட்து.
இந்த வீடியோவைப் பகிர்ந்த நபர், அதில், ‘இதுதான் சம்பளம் கிடைத்தவுடன் கிடைக்கும் மகிழ்ச்சி’ என்று எழுதியுள்ளார்.
அந்த பெண் ஏடிஎம் இயந்திரத்தின் முன் எதற்காக ஆடத் துவங்கினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், சமூக ஊடக பயனர்கள் அவருக்கு இது சம்பள நாளாக இருக்கும் என்றும், சம்பளம் தன் கையில் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் நடனமாடுகிறார் என்றும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.