உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், அதன் ஆண்ட்ராய்டு app-ன் அப்டேட் பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதன்படி நெட்ஃபிளிக்ஸின் ஆண்ட்ராய்டு appல் ப்ளே சம்திங் (Play Something) மற்றும் ஃபாஸ்ட் லாஃப்ஸ் ( Fast Laughs) என்ற புதிய 2 அம்சத்தை வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வருகிறது.
‘ப்ளே சம்திங்’ அம்சம் இப்போது ஆண்ட்ராய்டில் உள்ள அனைத்து நெட்ஃபிளிக்ஸ் பயனர்களுக்கும் கிடைக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், இந்த ஆண்டின் துவக்கத்தில் ப்ளே சம்த்திங் அம்சத்தை டெஸ்ட் செய்ய துவங்கியது.
ப்ளே சம்த்திங் அம்சம் என்பது ஒரு ரேண்டம் ஷஃபிள் (random shuffle) அம்சமாகும். இது யூஸர்கள் விரும்பி பார்க்கும் எந்தவொரு ரேண்டம் மூவி அல்லது டிவி ஷோவை ஒட்டிய புதிய கன்டென்டை கண்டறிய அவர்களுக்கு உதவும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அம்சத்தின்படி நெட்ஃபிளிக்ஸ் அல்காரிதம் யூஸர்கள் விரும்பி பார்க்கும் கன்டென்ட்கள் மற்றும் அவர்களது ஆர்வங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான கன்டென்ட்களை ப்ளே செய்யும்.
இந்த புதிய அம்சம், பல ஸ்ட்ரீமிங் சேவைகளால் வழங்கப்படும் ‘ஷஃபிள்’ செயல்பாட்டை நெட்ஃப்ளிக்ஸ் சொந்தமாக எடுத்து கொள்கிறது. ப்ளே சம்திங் அம்சம் ஏற்கனவே டெஸ்க்டாப்பில் சிறிது காலமாக இருந்து வருகிறது, இப்போது ஆண்ட்ராய்டு யூசர்களும் இதற்கான அக்சஸை பெற உள்ளார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதனிடையே ப்ளே சம்த்திங் அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு யூஸர்களுக்கு மட்டுமே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் iOS டிவைஸ்களில் இந்த ப்ளே சம்திங் அம்சத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சோதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தி வெர்ஜின் இதழில் வெளியாகி உள்ள அறிக்கைபடி, iOS யூஸர்கள் உடனடியாக ப்ளே சம்திங் அம்சத்தைப் பெற மாட்டார்கள். ஐபோன் மற்றும் ஐபேட் உள்ளிட்ட ஆப்பிள் டிவைஸ்களில் இந்த அம்சத்தை அனுபவிக்க இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
மறுபுறம் மற்றொரு அம்சமான Fast Laughs, கடந்த மார்ச் மாதம் முதல் iOS பயனர்களுக்கு கிடைத்து வருகிறது.ஹோம் ஸ்கிரீனில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு புதிய பட்டன் மூலம் Netflix Play Something அம்சத்தை யூஸர்கள் பயன்படுத்தலாம்.
யூஸர்கள் app-ல் உள்நுழைந்து அவர்களின் ப்ரொஃபைலை தேர்வு செய்த பிறகு இந்த அம்சத்தை காணலாம். நெட்ஃபிளிக்ஸின் புதிய அம்சமான Fast Laughs, இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் டிக்டாக் போன்றவற்றின் வேடிக்கையான வைரல் வீடியோ கிளிப்களை ஃபுல் ஸ்கிரீன் வெர்டிகிள் ஃபார்மெட்டில் ப்ளே ஆகி யூஸர்களை மகிழ்விக்கும் அம்சம் ஆகும்.
இந்த அம்சத்தை யூஸர்கள் அணுக ஹோம் ஸ்கிரீனில் தோன்றும் பாட்டம் பாரில் உள்ள பிரத்யேக மெனுவை பெற வேண்டும்.