இன்றைய அவசர உலகத்தில் ஆண்ட்ராய்டு செல்போன்கள், ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது.
தொலைபேசி அழைப்புகள் மட்டுமில்லாமல் ஆடியோ, வீடியோ, இன்டர்நெட், திரைப்படம், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், விதவிதமான செயலிகள் எனப் பலவித அம்சங்களுடன் உலா வரும் இத்தகைய ஆண்ட்ராய்டு செல்போன்கள், பலரிடமும் அது ஏதோ ஒரு மூன்றாம் கையைப் போல இடைவிடாமல் இயங்கிவருகிறது.
இதனிடையே சில சமயம் வேலை, பயணம் மற்றும் பிற அலுவல்கள் காரணமாக இத்தகைய செல்போன்களை எங்கேனும் மறந்து வைக்கவோ அல்லது தொலைக்கவோ கூட வாய்ப்புள்ளது.
அத்தகைய சமயங்களில், செல்போனில் உள்ள ‘ஃபைன்ட் மை டிவைஸ்’ அம்சத்தைப் பயன்படுத்தி அதை எளிதாக கண்டறியலாம்.
ஆனால் இந்த அம்சத்தின் மூலம், நீங்கள் உங்கள் செல்போனை கண்டுபிடிக்க, கூகுளின் ஜிமெயில் மற்றும் அதன் லொகேஷன் சேவைகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
இதற்காக உங்களின் செல்போன் நம்பரை கூகுளின் ஜிமெயிலுடன் சேர்த்திருக்க வேண்டும். மேலும் உங்கள் செல்போன் ஆன் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அதேசமயம் தொலைந்த செல்போன்களை கண்டுபிடிப்பதில், சில ஆண்ட்ராய்டு மாடல்கள் வித்தியாசமான செயலிகளையும் வழங்குகின்றன. உதாரணம் சாம்சங்கின் ‘ஃபைன்ட் மை மொபைல் ஆப் ‘.
கூகுளின் ‘ஃபைன்ட் மை டிவைஸ்’ அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?
படி 1: உங்கள் செல்போனில் உள்ள செட்டிங்க்ஸ்க்கு சென்று செக்கியூரிட்டி என்பதை திறக்கவும்.
படி 2: அதில் நீங்கள் ‘ஃபைன்ட் மை டிவைஸ்’ அம்சத்தைக் காணலாம். ஆனால் அது ஆப் செய்யப்பட்டிருக்கும். ஆகவே விரைந்து ‘ஃபைன்ட் மை டிவைஸ்’ அம்சத்தை ஆன் செய்யவும். ஒருவேளை நீங்கள் உங்கள் செல்போனில் லொகேஷன் சேவைகளுக்காக வேறு செயலிகளை பயன்படுத்தினாலும், கூகுள் பிளேஸ்டோர் சென்று அதன் லொகேஷன் சேவைகளுக்கான செயலியை டவுன்லோடு செய்யவும்.
ஏனெனில் அப்பொழுதுதான் கூகுளின் இந்த ‘ஃபைன்ட் மை டிவைஸ்’ அம்சத்தை உங்கள் செல்போனில் பயன்படுத்த முடியும்.
லொகேஷன் ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
படி 1: முதலில் உங்கள் செல்போனின் செட்டிங்க்ஸில், லொகேஷன் என்பதை கண்டறியவும். பிறகு அது ஆன் செய்யப்பட்டு இருக்கிறதா, இல்லையா எனப் பார்க்கவும்.
படி 2: ஒருவேளை லொகேஷன் ஆன் செய்யப்பட்டு இருந்தால் நல்லது. இல்லையெனில் லொகேஷனை ஆன் செய்யவும்.
குறிப்பு: உங்களின் எந்தெந்த செயலிகள் லொகேஷன் அம்சத்தைப் பயன்படுத்துகின்றன என்பதையும், நீங்கள் இங்கே காணலாம். வேண்டுமானால் நீங்கள் “ஆப் பெர்மிஷன்” என்பதற்கு சென்று, நீங்கள் விரும்பும் செயலிகள் மட்டும் உங்களின் லொகேஷனை பயன்படுத்துமாறு மாற்றியமைக்கலாம்.
ஒருவேளை கூகுளின் ‘ஃபைன்ட் மை டிவைஸ்’ அம்சம், உங்கள் ஆண்ட்ராய்ட் செல்போனுக்குள்ளேயே இருப்பின், உங்கள் செல்போனை கண்காணிப்பதற்கான படிநிலைகளைக் கீழே காணலாம்.
படி 1: கூகுளின் தேடல் பக்கத்துக்கு சென்று ‘ஃபைன்ட் மை டிவைஸ்’ என டைப் செய்யவும்.
படி 2: ஒருவேளை நீங்கள் இந்த அம்சத்தை முதன்முறையாகப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் செல்போனை கண்காணிப்பதற்கு கூகுளுடன் உங்களின் லொகேஷனை பகிர வேண்டும்.
இதற்காக உங்களின் லொகேஷன் டேட்டாகளை கையாள்வதற்கு கூகுளிற்கு அனுமதியளிக்கவும்.
படி 3: இங்கே ‘ஃபைன்ட் மை டிவைஸ்’ பக்கத்துக்கு அழைத்துச் செல்லும் லிங்க்கை கிளிக் செய்யவும். அங்கே நீங்கள் உங்கள் செல்போனின் பெயர், அது கடைசியாக எப்போது ஒலித்தது, அது பயன்படுத்தும் வைஃபை நெட்வொர்க்கின் பெயர், தற்போதைய பேட்டரி சதவீதம் என அனைத்தையும் காணலாம்.
படி 4: உங்கள் செல்போன் கடைசியாக இருந்த இடத்தை கூகுள் மேப் காண்பிக்கும்.
குறிப்பு: உங்களது செல்போனை கூகுள் தேடல் பக்கத்திலிருந்து, உடனடியாக நீங்கள் அழைக்கவும் முடியும்.