ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெய மால்யதாவிற்கு சரஸ்வதி பூஜையையொட்டி புதிய ஆடையும் புதிய துணியினாலான நெற்றி பட்டையும் ஆண்டாள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அணிவிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெய மால்யதா(17). இந்த யானைக்கு சரஸ்வதி பூஜையையொட்டி வியாழக்கிழமை மாலை கோவில் வளாகத்தில் வைத்து புதிய ஆடையும் துணியால் தைக்கப்பட்ட வண்ண வண்ண கலரில் ஆன நெற்றி பட்டையும் அணிவிக்கப்பட்டது.
புதிய ஆடையுடன் யானை பிரகாரத்தை சுற்றி வந்து பின்னர் எப்போதும் போல் யானை கால் மண்டபத்தில் வழக்கம் போல் நின்றது.
புத்தம் புதிய ஆடையுடனும் நெற்றி பட்டையுடனும் காட்சி அளித்த யானையைப் பார்த்த கோயிலுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்