வாகாவை தொடர்ந்து வாகாய் தார் பாலைவனத்தில் தல! வைரல் போட்டோ!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினிமா
ajith 1 6
ajith 1 6

வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் தேசியக் கொடியை ஏந்தியபடி நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாக பரவியது.

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படட்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை திரைப்படத்தில் ஏற்கனவே டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு முடிந்த கையோடு, தமது நீண்ட நாள் கனவான உலகம் முழுவதும் பைக்கில் சுற்றும் பயணத்தை அஜித் தொடங்கிவிட்டார்.

ajith Maral Yasarloo
ajith Maral Yasarloo

இதற்கு முன்னர் இப்படியான பயணத்தை மேற்கொண்ட மாரல் யாஜர்லு என்ற பெண்ணையும் தல அஜித் சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வடஇந்தியவில் பயணத்தை தொடங்கிய தல அஜித், வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

ரசிகர்கள் மட்டுமல்லாது இந்தி திரையுலகின் முக்கிய புள்ளியான தயாரிப்பாளர் போனி கபூரும் அஜித்தின் புகைப்படங்களை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், லட்சியத்துக்காக தல அஜித் வாழ்வதையோ, அவரது கனவுகளை நிஜமாக்க உழைப்பதையோ யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று போனி கபூர் புகழாரம் சூட்டியிருந்தார்.

ajith 1 7
ajith 1 7

இந்தநிலையில் அஜித் மேற்கொள்ளும் உலக பயணத்தின் மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டு சென்று திரும்பும் வழியில் உள்ள தார் பாலைவனத்தில் தல அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

பைக்கில் சாய்ந்தவாறு தண்ணீர் அருந்தும் தல அஜித்தின் புகைப்படங்களை அவரது ரசிகர்ள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.